ஐ.பி.எல் ஏலத்தில் ஜொலிக்க வாய்ப்பு இருக்கும் 5 முக்கிய பேட்ஸ்மேன்கள் |

ஐ.பி.எல் 2023 : ஐ.பி.எல் போட்டியின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில்,அந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ஆம் கொச்சியில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் மினி ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களில் அனைத்து அணிகளும் வாங்க போட்டிப்போடும் வாய்ப்புள்ள வீரர்களில் முக்கிய ஐந்து பேட்ஸ்மேன்களை பற்றிக் காண்போம்.
1) நிக்கோலஸ் பூரான்
மேற்கிந்திய தீவுகளை அணியை சேர்த்த அதிரடி பேட்ஸ்மேன் ஆனா "நிக்கோலஸ் பூரான்" ஐ.பி.எல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆனால் இதுவரை இந்த ஐ.பி.எல் தொடர்களில் பெரியதாகத் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இவர் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் என்பதில் ஐயமில்லை. இறுதியாகக் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியின் போக்கையே மாற்றும் திறனுள்ள ஒரு வீரர். எனவே இவர் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 2 கோடியைப் பதிவு செய்துள்ளார். இவரை வாங்கப் பல அணிகள் போட்டிப் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் இவரது பங்களிப்பு:
போட்டிகள் |
47 |
ரன்கள் |
912 |
அதிக ரன் |
77 |
ஸ்ட்ரைக் ரேட் |
151.24 |
சராசரி |
26.06 |
2) கேன் வில்லியம்சன்
இந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் நியூஸிலாந்து அணியை சேர்ந்த கேன் வில்லியம்சன் அவர்களை வாங்க அணிகள் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் ஒரு அணியைத் திறமையாக வழிநடத்தும் ஒரு கேப்டனாகவும் பயன்படுவார். மேலும் இவர் பலநேரங்களில் தனது நேர்த்தியான ஆட்டத்தினால் தோல்வியை நோக்கிச் செல்லும் அணியை வெற்றியடையச் செய்துள்ளார்.
கேன் வில்லியம்சன் இந்த ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 2 கோடியை பதிவு செய்துள்ளார்.
இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் இவரது பங்களிப்பு:
போட்டிகள் |
76 |
ரன்கள் |
2101 |
அதிக ரன் |
89 |
ஸ்ட்ரைக் ரேட் |
126.03 |
சராசரி |
36.22 |
3) மயங்க் அகர்வால்
இந்த வரிசையில் அடுத்தாக இடம்பெற்றுள்ள இந்தியா வீரர் மயங்க் அகர்வால் கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட கேப்டன் பொறுப்பினால் தனது பேட்டிங்கில் சரியாக பங்களிக்க முடியாமல் போனது. இவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக முதலில் களமிறங்கிப் பல போட்டிகளில் இறுதிவரை விளையாடி வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். இவர் வரும் ஐ.பி.எல் ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 1 கோடியைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பல அணிகள் இவரை வாங்க முன்வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் இவரது பங்களிப்பு
போட்டிகள் |
113 |
ரன்கள் |
2331 |
அதிக ரன் |
106 |
ஸ்ட்ரைக் ரேட் |
134.51 |
சராசரி |
22.63 |
4) ஹாரி புரூக்
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஹாரி புரூக் வரும் ஐ.பி.எல் ஏலத்தில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார் தனது அடிப்படை விலையாக 1.5 கோடியைப் பதிவு செய்துள்ளார். இவர் ஒரு இளம் வீரர் என்பதாலும் மேலும் ஒரு ஆல்ரவுண்டராக இருப்பதால் இவரை வாங்கினால் அணியின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவும் என்பதை நன்கு உணர்ந்த அணிகள் இவரை வாங்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களுக்கு மிகுந்த வரவேற்புள்ள நிலையில் ஹாரி புரூக் நல்ல விலைக்கு இந்த ஏலத்தில் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
5) ரிலீ ரோசோவ்
ரிலீ ரோசோவ் இதுவரை இரண்டு ஐ.பி.எல் தொடர்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார் மேலும் சில காலம் ஓய்வில் இருந்த இவர் இந்த வருடம் தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் பல வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலக்கியுள்ளார்.
இதனால் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்த்த ஆல்ரவுண்டரான ரிலீ ரோசோவை வாங்க அனைத்து அணிகளும் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடதுகை பேட்ஸ்மேன் ஆக இவர் இருப்பதாலும் மேலும் இந்தியா எதிரான தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதாலும், இவர் மீது ஐ.பி.எல் போட்டிகளில் அதிக எதிர்பார்ப்புள்ளது. இதனால் இவருக்கு இந்த ஐ.பி.எல் தொடரில் அனைத்து அணிகள் இடத்திலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் இவரது பங்களிப்பு
போட்டிகள் |
5 |
ரன்கள் |
53 |
அதிக ரன் |
24 |
ஸ்ட்ரைக் ரேட் |
103.92 |
சராசரி |
10.6 |