இவருக்கு 17.50 கோடி வேஸ்ட்.. கேமரூன் கிரீன் சொதப்பத்தான் போறார்.. ஏன்னு தெரியுமா?

IPL 2023 : கேமரூன் கிரீன் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.17.50 கோடிக்கு ஐபிஎல் 2023 மினி ஏலத்தின் போது எடுக்கப்பட்டார். கேமரூன் கிரீன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட்டிங் ஆல்ரவுண்டர் ஆவார். அவர் ஐபிஎல் 2023 இல் தனது முதல் ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார்.
கேமரூன் கிரீன் ஒரு சக்திவாய்ந்த பேட்டிங் ஆல்-ரவுண்டர் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிக்காக டி20 வடிவத்தில் தனது சிறந்த செயல்திறனைக் காட்டி அனைவரையும் கவர்ந்துள்ளார். அவர் ஒரு மிகச் சிறந்த பேட்டர் மற்றும் பேட்டிங்கில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார். இது அவரை டி20 ஆட்டங்களுக்கு பவர்-ஹிட்டராக ஆக்குகிறது.
ஆனால், ஐபிஎல் 2023 இல் கேமரூன் கிரீன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தோல்வியடைவதற்கான 3 காரணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கேமரூன் கிரீன் ஐபிஎல் 2023 இல் தோல்வியடைவதற்கான 3 காரணங்கள்
3. ஐபிஎல் அனுபவம் இல்லை
கேமரூன் கிரீனுக்கு இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை. ஐபிஎல் 2023 அவரது முதல் ஐபிஎல் போட்டியாகும். மேலும் அவர் போட்டிக்கு புதியவராக இருப்பார். எனவே, ஐபிஎல்லில் இருக்கும் அழுத்தத்திற்கு கேமரூன் கிரீன் பழக்கமில்லை.
எனவே, அவர் தனது முதல் சீசனில் போட்டிக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்வது கடினமாக இருக்கலாம் மற்றும் அவரது செயல்திறனில் வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம். எனவே, கிரீனின் பூஜ்ஜிய ஐபிஎல் அனுபவம் ஐபிஎல் 2023 இல் அவரது செயல்திறனைப் பாதிக்க வாய்ப்புண்டு.
2. ரன் குவிப்பில் சொதப்பல்
இதுவரை டி20 போட்டிகளில் கேமரூன் கிரீனின் செயல்திறனைப் பார்த்தால், அவர் ஆஸ்திரேலியாவுக்காக 8 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த ஆட்டங்களில் அவர் 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் இதுவரை 8 டி20 போட்டிகளில் 173+ ஸ்டிரைக் ரேட்டைப் பெற்றிருந்தாலும், பல ஆட்டங்களில் அவர் நல்ல ரன்களை எடுக்கத் தவறிவிட்டார்.
இந்தியாவுக்கு எதிராக 3 ஆட்டங்களில் 118 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், மற்ற போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார். எனவே, அவர் பெரும்பாலும் ஒரு நல்ல ரன்களை கொண்டு வரத் தவறிவிடுகிறார். இதனால் ஐபிஎல் 2023 இலும் அவர் மோசமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
1. திறனற்ற பந்துவீச்சு
கேமரூன் கிரீன் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர். எனவே அவர் ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சில ஓவர்கள் வீசுவார். இதுவரை 8 டி20 போட்டிகளில், அவர் 35.60 என்ற சராசரியை 8.90 என்ற எகானமியில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடிய போது, அவர் 10.0 என்ற எகானமி விகிதத்தை பதிவு செய்தார்.
கிரீன் ஒரு சக்திவாய்ந்த நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் அல்ல. போட்டிகளின் போது எதிரணி வீரர்கள் அவரை குறிவைக்க முயற்சிப்பார்கள். எனவே, ஐபிஎல் 2023 இல் கிரீன் மிகவும் விலை உயர்ந்தவராக இருந்தாலும், அவர் போட்டியில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய வீரர்களில் ஒருவராக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.