IPL 2023 : சிஎஸ்கேவால் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு அதிக டிமாண்ட்.. கொத்தாக அள்ள காத்திருக்கும் அணிகள்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 26, 2022 & 12:03 [IST]

Share

IPL 2023 : ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளன.

அதில் செயல்படாத வீரர்களை அனைத்து அணிகளும் நீக்குவது வாடிக்கை தான் என்றாலும், சில அணிகள் கடந்த காலத்தில் தங்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களையும் விடுத்துள்ளது. இதனால் கொச்சியில் நடைபெற உள்ள மினி ஏலத்தில் இந்த வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வீரர்களில், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாப் 3 வீரர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

3. ஆடம் மில்னே

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆடம் மில்னே 2022 ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸால் (CSK) வாங்கப்பட்டார். மேலும் அவர் சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11'இல் ஒரு ஆட்டத்தில் மட்டுமே இடம்பெற்றார். அதற்கு பின்னர் தொடை காயத்தால் பாதிக்கப்பட்டு முழு போட்டியிலிருந்தும் வெளியேறினார். கடந்த சீசனில் அவரது சேவைகளை முழுமையாகப் பெறத் தவறியதால், சிஎஸ்கே அவரை விடுவிக்க முடிவு செய்தது.

ஆடம் மில்னே தொடர்ந்து மணிக்கு 140 கிமீ முதல் 150 கிமீ வேகத்தில் பந்துவீச முடியும் என்பதால், மற்ற அணியினர் அவர் மீது ஆர்வம் காட்டலாம். அவரது அற்புதமான வேகத்தால், அவர் ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோருக்கு உதவ பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அவரை வாங்கும் முனைப்புடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதே போல் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ​​முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் அணியின் பந்துவீச்சுக்கு வலுசேர்க்க, அவரை வாங்கும் திட்டத்துடன் உள்ளது.

முன்னதாக, ஆடம் மில்னே சர்வதேச கிரிக்கெட்டில், 2022 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு அங்கமாக இருந்தார். மற்ற சிறந்த பந்துவீச்சாளர்களான டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோரும் அணியில் இடம் பெற்றிருந்ததால், அவரால் போட்டியில் எந்தப் போட்டியிலும் விளையாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. கிறிஸ் ஜோர்டான்

3.60 கோடிக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ் ஜோர்டானை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கடந்த முறை வாங்கியது. அவர் முக்கியமாக டெத் பந்துவீச்சு சிக்கல்களைத் தீர்க்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, 10.52 என்ற மோசமான எகானமி ரேட்டில் நான்கு ஆட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

கடந்த சீசனிலும், அவர் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அவரை சிஎஸ்கேவில் தக்க வைக்க விரும்பால் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு உலகக் கோப்பை ஆட்டங்களில் அவரது அவரது சமீபத்திய செயல்திறன் அபாரமாக இருந்தது. 

இதனால் மினி-ஏலத்தில் அவரை வாங்குவதற்காக பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) போன்ற அணிகள் தங்கள் பந்துவீச்சு தாக்குதலுக்கு பலம் அளிக்க அவரை ஏலம் எடுக்கலாம்.

1.டுவைன் பிராவோ

2023 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸின் தக்கவைப்பு பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ இல்லை. 2011 முதல் ஒவ்வொரு சிஎஸ்கே சீசனின் ஒரு பகுதியாக இருந்த பிராவோ, கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக, அவர் அணிக்கு விரும்பிய முடிவுகளை வழங்கத் தவறிவிட்டார். 

இதனால் கடந்த ஆண்டு 4.40 கோடி ரூபாய் என்ற குறைந்த தொகையில் தான் சிஎஸ்கே அவருக்கு கொடுத்தது. இதையடுத்து இந்த ஆண்டு, சிஎஸ்கே அவரை மீண்டும் தக்கவைப்பு பட்டியலில் இருந்து வெளியேற்றியது. கடந்த ஆண்டு, அவர் 11.50 சராசரியில் 23 ரன்கள் மட்டுமே எடுத்ததார். மேலும் 8.71 என்ற மோசமான எகானமியில் 16 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். 

முன்னதாக அவர் 2008 முதல் 2010 வரை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த முறை, மும்பை இந்தியன்ஸ் அணி கீரன் பொல்லார்டை நீக்கியுள்ளதால், அவருக்கு பதிலாக பிராவோவை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற உரிமையாளர்கள் தங்கள் அணிகளில் சரியான ஆல்-ரவுண்டர்கள் இல்லாததால், வரவிருக்கும் ஏலத்தில், இந்த அணிகள் பிராவோவை தங்கள் அணிக்காக ஏலம் எடுக்க முயற்சி செய்யலாம். அவரது அனுபவம் மற்றும் திறமை காரணமாக, பிராவோ மிக அதிக விலையில் ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.