சர்வதேச லீக் டி20 2023 தொடரின் அணிகள்,போட்டிகள், பிளேயர்கள் குறித்த முழு விவரங்கள்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்தும் முக்கிய டி20 தொடராக உருவாகியுள்ள சர்வதேச லீக் டி20 தொடரின் முதல் ஆண்டு போட்டிகள் இந்த ஆண்டில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள்,வீரர்கள்,போட்டிகள் என அனைத்தையும் விரிவாக பார்ப்போம்.
அணிகளின் விவரம் :
சர்வதேச லீக் டி20 தொடர் தனது முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் மொத்தம் 6-அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.
1) அபுதாபி நைட் ரைடர்ஸ்
2) துபாய் கேபிடல்ஸ்
3) டெசர்ட் வைப்பர்ஸ்
4) கல்ப் ஜெயண்ட்ஸ்
5) எம்ஐ எமிரேட்ஸ்
6) ஷார்ஜா வாரியர்ஸ்
ஐ.எல்.டி லீக் டி20 தொடரின் போட்டிகள் முறை :
இந்த தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடைபெற உள்ளது,இதில் தொடரில் இடம்பெற்றுள்ள 6-அணிகளும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் இரண்டு முறை விளையாடும், எனவே மொத்தமாக லீக் சுற்றில் 30-போட்டிகள், அதன்பின் புள்ளிகள் அடிப்படையில் முன்னனியில் இருக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் பங்கேற்கும் வகையில் 4-போட்டிகள் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் தொடரில் நடைபெறுவதை போலவே பிளே-ஆப் சுற்று போட்டிகள் இந்த தொடரிலும் நடைபெறும் எப்=என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளின் ஒளிபரப்பு தளம் மற்றும் நேரம் :
இந்தியாவில் சர்வதேச லீக் டி20 தொடரின் போட்டிகளை ஜீ குழுமம் தான் ஒளிபரப்ப போகிறது,அதாவது தொலைக்காட்சியில் ஜீ நெட்வொர்க்கில் உள்ள 10-சேனல்களிலும் மற்றும் ஜீ-5 ஓடிடி தளத்தில் போட்டிகள் காணலாம்.
இந்த தொடரின் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும்,மேலும் இரண்டு போட்டிகள் உள்ள நாட்களில் மதியம் 3:30 மணிக்கு ஒரு போட்டியும் மேலும் 7:30 மணிக்கு ஒரு போட்டியும் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் விவரம் :
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 34-போட்டிகளும் முறையே 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது.
துபாய் சர்வதேச அரங்கம் : 16 போட்டிகள்
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம் : 10 போட்டிகள்
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் : 8 போட்டிகள்
ஐ.எல்.டி லீக் டி20 தொடரின் பிளேயர்கள் விவரம் :
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி : சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜானி பேர்ஸ்டோவ், பால் ஸ்டிர்லிங், லஹிரு குமார, சரித் அசலங்கா, கொலின் இங்க்ராம், அகேல் ஹொசைன், சீக்குகே பிரசன்னா, ரவி ராம்பால், ரேமண்ட் ரைபர், கென்னர் லூயிஸ், அலி கான், பிராண்டன் குளோவர்.
துபாய் கேபிடல்ஸ் அணி : ரோவ்மேன் பவல் (கேப்டன்), துஷ்மந்த சமீரா, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ஃபேபியன் ஆலன், முஜீப் உர் ரஹ்மான், சிக்கந்தர் ராசா, நிரோஷன் டிக்வெல்லா, தசுன் ஷனக, பானுகா ராஜபக்ச, டான் லாரன்ஸ், பிளஸ்ஸிங் முசரபானி, இசுரு உதானா, ஜார்ஜ் முன்சே, ஃபிரெட் கிளாஸ்.
டெசர்ட் வைப்பர்ஸ் அணி : அலெக்ஸ் ஹேல்ஸ், பென் டக்கெட், பென்னி ஹோவெல், கொலின் முன்ரோ (கேப்டன்), ரூபன் ட்ரம் பெல்மேன், சாம் பில்லிங்ஸ், சந்தீப் லாமிச்சானே, சாகிப் மஹ்மூத், ஷெல்டன் காட்ரெல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், டாம் கர்ரன், வனிந்து ஹசரங்கா.
கல்ப் ஜெயண்ட்ஸ் அணி : ஷிம்ரோன் ஹெட்மையர், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் லின், டாம் பான்டன், டொமினிக் டிராக்ஸ், டேவிட் வைஸ், ஜேமி ஓவர்டன், ரிச்சர்ட் கிளீசன், ரெஹான் அகமது, வெயின் மேட்சன், லியாம் டாசன், ஜேம்ஸ் வின்ஸ் (கேப்டன்), கைஸ் அகமது, ஒல்லி போப்.
எம்ஐ எமிரேட்ஸ் அணி : கெய்ரான் பொல்லார்ட் (கேப்டன்), டுவைன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், டிரென்ட் போல்ட், ஆண்ட்ரே பிளெட்சர், இம்ரான் தாஹிர், சமித் படேல், வில் ஸ்மீட், ஜோர்டான் தாம்சன், நஜிபுல்லா சத்ரன், ஜாஹிர் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, பிராட் வீல், பாஸ் டி லீட்.
ஷார்ஜா வாரியர்ஸ் அணி : எவின் லூயிஸ், டேவிட் மாலன், டாம் கோஹ்லர்-காட்மோர், கிறிஸ் பெஞ்சமின், ரஹ்மானுல்லா குர்பாஸ், மொயின் அலி (கேப்டன்), முகமது நபி, கிறிஸ் வோக்ஸ், ஜேஜே ஸ்மிட், மார்க் டெயால், நூர் அகமது, டேனி பிரிக்ஸ், நவீன்-உல்-ஹக், பிலால் கான்.
ஐ.எல்.டி லீக் டி20 தொடரின் முழு அட்டவணை :
எண் |
தேதி |
போட்டி |
இடம் |
1 |
ஜனவரி-13 |
துபாய் கேப்பிட்டல்ஸ் vs அபுதாபி நைட் ரைடர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
2 |
ஜனவரி-14 |
எம்.ஐ எமிரேட்ஸ் vs ஷார்ஜா வாரியர்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
3 |
ஜனவரி-15 |
அபுதாபி நைட் ரைடர்ஸ் vs கல்ப் ஜெயண்ட்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
4 |
ஜனவரி-15 |
டெசர்ட் விப்பர்ஸ் vs ஷார்ஜா வாரியர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
5 |
ஜனவரி-16 |
துபாய் கேப்பிட்டல்ஸ் vs கல்ப் ஜெயண்ட்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
6 |
ஜனவரி-17 |
ஷார்ஜா வாரியர்ஸ் vs எம்ஐ எமிரேட்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
7 |
ஜனவரி-18 |
டெசர்ட் விப்பர்ஸ் vs அபுதாபி நைட் ரைடர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
8 |
ஜனவரி-19 |
கல்ப் ஜெயண்ட்ஸ் vs துபாய் கேப்பிடல்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
9 |
ஜனவரி-20 |
அபுதாபி நைட் ரைடர்ஸ் vs டெசர்ட் வைப்பர்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
10 |
ஜனவரி-21 |
துபாய் கேபிடல்ஸ் vs ஷார்ஜா வாரியர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
11 |
ஜனவரி-21 |
அபுதாபி நைட் ரைடர்ஸ் vs எம்.ஐ எமிரேட்ஸ் ஷேக் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
12 |
ஜனவரி-22 |
டெசர்ட் விப்பர்ஸ் vs கல்ப் ஜெயண்ட்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
13 |
ஜனவரி-22 |
எம்.ஐ எமிரேட்ஸ் vs துபாய் கேபிடல்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
14 |
ஜனவரி-23 |
கல்ப் ஜெயண்ட்ஸ் vs ஷார்ஜா வாரியர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
15 |
ஜனவரி-24 |
எம்.ஐ எமிரேட்ஸ் vs டெசர்ட் வைப்பர்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
16 |
ஜனவரி-25 |
கல்ப் ஜெயண்ட்ஸ் vs அபுதாபி நைட் ரைடர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
17 |
ஜனவரி-26 |
ஷார்ஜா வாரியர்ஸ் vs துபாய் கேபிடல்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
18 |
ஜனவரி-27 |
கல்ப் ஜெயண்ட்ஸ் vs எம்.ஐ எமிரேட்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
19 |
ஜனவரி-28 |
ஷார்ஜா வாரியர்ஸ் vs அபுதாபி நைட் ரைடர்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
20 |
ஜனவரி-28 |
துபாய் கேப்பிட்டல்ஸ் vs டெசர்ட் வைப்பர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
21 |
ஜனவரி-29 |
டெசர்ட் விப்பர்ஸ் vs எம்ஐ எமிரேட்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
22 |
ஜனவரி-30 |
அபுதாபி நைட் ரைடர்ஸ் vs துபாய் கேபிடல்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
23 |
ஜனவரி-31 |
ஷார்ஜா வாரியர்ஸ் vs டெசர்ட் வைப்பர்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
24 |
பிப்ரவரி -1 |
எம்.ஐ எமிரேட்ஸ் vs கல்ப் ஜெயண்ட்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
25 |
பிப்ரவரி -2 |
டெசர்ட் வைப்பர்ஸ் vs துபாய் கேபிடல்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
26 |
பிப்ரவரி -3 |
எம்.ஐ எமிரேட்ஸ் vs அபுதாபி நைட் ரைடர்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
27 |
பிப்ரவரி -4 |
கல்ப் ஜெயண்ட்ஸ் vs டெசர்ட் வைப்பர்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
28 |
பிப்ரவரி -4 |
அபுதாபி நைட் ரைடர்ஸ் vs ஷார்ஜா வாரியர்ஸ் |
ஷேக் சயீத் மைதானம் ,அபுதாபி |
29 |
பிப்ரவரி -5 |
துபாய் கேப்பிட்டல்ஸ் vs எம்ஐ எமிரேட்ஸ் |
துபாய் சர்வதேச மைதானம் |
30 |
பிப்ரவரி -6 |
ஷார்ஜா வாரியர்ஸ் vs கல்ப் ஜெயண்ட்ஸ் |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
31 |
பிப்ரவரி -8 |
அணி 1 vs அணி 2 |
துபாய் சர்வதேச மைதானம் |
32 |
பிப்ரவரி -9 |
அணி 3 vs அணி 4 |
ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் |
33 |
பிப்ரவரி -10 |
அரையிறுதி போட்டி |
துபாய் சர்வதேச மைதானம் |
34 |
பிப்ரவரி -12 |
இறுதி போட்டி |
துபாய் சர்வதேச மைதானம் |