WPL AUCTION 2023 : மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் கோடிகளில் மிதக்கும் இளம் இந்திய வீராங்கனைகள்..!!

மகளிர் பிரீமியர் லீக் முதல் தொடருக்கான ஏலம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாடு மையத்தில் தற்போது நடந்து வரும் நிலையில், இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் அதிக விலைக்கு கோடிகளில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளன.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை உலக அளவில் பிரபலப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் சார்பில் மகளிர் பிரீமியர் லீக் தொடரை 2023 ஆம் ஆண்டு முதல் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஏலம் மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள 5 அணிகளும் தங்கள் அணிக்கான பிளேயர்களை வாங்க முழு வீச்சில் பங்கேற்றார்கள்.
இந்த ஏலத்தில் முதல் பிளேயர் ஆகா இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டது தற்போதைய நிலையில் இந்த ஏலத்தின் அதிகபட்ச விலையாக பதிவாகி உள்ளது,மேலும் இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்டு உள்ளார்கள்.
இந்திய அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 2.6 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்,மேலும் இந்திய அணியின் பவுலிங் ரேணுகா சிங் 1.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விற்கப்பட்டார்.
இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் ஷபாலி வர்மா 2 கோடிக்கும் , ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2.2 கோடிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர், மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் 1.9 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் கோடிகளில் பிளேயர்களை வாங்குவதை பார்க்கும் பொழுது, இந்த தொடரின் மீதும் பிளேயர்களின் திறன் மீதும் உள்ள நம்பிக்கையை அறிய முடிகிறது, இந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலம் போல் போட்டிகளிலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.