IND VS AUS 2023 : ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு..!! ரோஹித் சர்மா விலகல்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது, இதனை தொடர்ந்து மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய அணி வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் புதிய மாற்றம் ஏதும் இல்லாமல் பழைய அணியுடன் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது, மேலும் 2வது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து விலகிய ஜெயந்த் யாதவ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணி : ரோஹித் சர்மா(கேப்டன் ), கே.எல். ராகுல், ஷுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியும் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று உறுதியாகி உள்ளது, முக்கிய குடும்ப நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியை முதல் ஒருநாள் போட்டியில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது,மேலும் ஒருநாள் அணியில் புதிதாக நியூசிலாந்து தொடரில் இடம் பெறாத வீரர்கள் ஜெயந்த் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இணைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒருநாள் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (வி. கீ ), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.