2023-ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான தொடர்கள்..! இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்குமா? இந்திய அணி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 02, 2023 & 10:30 [IST]

Share

இந்திய கிரிக்கெட் அணிக்கு  2023-ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு என்றே சொல்லலாம்,ஒருநாள் உலகக்கோப்பை,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என முக்கிய தொடர்கள் இந்த ஆண்டில் நடக்க உள்ளது.இந்நிலையில் இந்திய அணி முதல் மூன்று மாதங்களில் விளையாடும் போட்டிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்திய மண்ணில் இந்த ஆண்டு 50-ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கு பயிற்சி அளிக்கும் விதமாக அனைத்து அணிகளும் இந்திய அணியுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வகையில் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியா வரும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 3-டி20 போட்டிகள் மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடர் நாளை ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

அடுத்தாக இந்தியா வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 3-ஒருநாள் போட்டிகள் மற்றும் 3-டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது,அந்த தொடர் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

அதன்பின் இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி 4-டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாட உள்ளது,இந்த தொடர் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு  பெரிய அளவில் சிறப்பாக அமையாததால்,இந்த வருடம் இந்திய அணி  தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி  2023-ஆம் ஆண்டு முதல் போட்டியாக இலங்கை அணிக்கு எதிராக நாளை ஜனவரி 3-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் முதல் டி-20 போட்டியில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.