சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 30, 2022 & 18:25 [IST]

Share

இந்தியா கிரிக்கெட் வாரியத்திற்கு உலகக்கோப்பையின் தோல்விக்கு பிறகு பலதரப்பில் இருந்து கேள்விகள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களின் தேர்வு செய்யும் குழுவின் மீது தான் அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 

அதிலும் தற்போது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மறுக்கப்படும் வாய்ப்பிற்காக இந்திய அளவில் அனைத்து ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த கிரிக்கெட் வீரர் தான் சஞ்சு சாம்சன். 28-வயதான இவர்  கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஒரு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக 2015-ஆம் ஆண்டே தேர்வு செய்யப்பட்டார். முதல் தர கிரிக்கெட்டில் சிறந்த விளங்கியதாலும், ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதாலும் இவரை தேர்வு செய்தனர்.

சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை வெறும் 16-டி20 போட்டிகளிலும் ,11- ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணியில் இவர் தேர்தெடுக்கப்பட்டாலும் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் மறுக்கப்பட்டு வந்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இப்போது இந்திய அணி நியூஸிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. இதிலும் சஞ்சு சாம்சனுக்கு சரியாக வாய்ப்பு வழங்கப்படுவில்லை. இதை பார்த்து பொங்கிய கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

மேலும் பிபா உலகக்கோப்பை நடக்கும் கத்தாரில் ஒரு போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இதனால் வாய்ப்பு வழங்கப்படாமல் சஞ்சு சாம்சன் நிராகரிக்கப்படுவதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து சரியான முடிவு எடுக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.