நியூசிலாந்து அணியை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா..! ரசிகர்கள் ஆரவாரம்..!

இந்திய மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில்,மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது, இதில் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்ற நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்திய அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய தீர்மானித்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்து அணியின் பவுலர்களை தங்கள் அதிரடி பேட்டிங்கால் சிதறடித்தார்கள்,குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 101(85) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார், இளம் வீரர் கில் 112(78) ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்,அதன்பின் அணியின் மிடில் ஆர்டர் சற்று சொதப்பிய நிலையில் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 54(38 ) அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 385 ரன்களை பதிவு செய்தது, அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பவுலிங்கில் திணறிய நிலையில் தொடக்க வீரர் அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே பொறுப்புடன் விளையாடி 138(100) ரன்கள் அடித்து உம்ரன் மாலிக் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் தடுமாறிய நியூசிலாந்து அணி இறுதியாக 41.2 ஓவர்களில் 295 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, குறிப்பாக சிறப்பாக பௌலிங் செய்த ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.
இறுதி ஒருநாள் போட்டியில் முக்கிய தருணத்தில் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.மேலும் இந்த ஒருநாள் தொடரில் அதிரடியை வெளிப்படுத்தி ரன்களை குவித்த சுப்மன் கில் தொடரின் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்திய அணி இறுதி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது,மேலும் ஒருநாள் தொடரை 3-0 என்ற நிலையில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து ஒரு நாள் தொடரில் தனது நிலையை நிரூபித்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை தொடரின் வெற்றி நம்பிக்கையை இந்திய ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.