இந்தியா vs இலங்கை டி20: பாண்டியா செய்த இரண்டு அதிரடி மாற்றங்கள்..? புதிய பிளேயிங் லெவன்..??

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 05, 2023 & 13:32 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் டி-20 தொடரில் விளையாடி வருகிறார்கள்,இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் புதிய பிளேயிங் லெவன் உடன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று 2-வது டி-20 போட்டியில் புனேவில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாட உள்ளனர்,இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் பாட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக  ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நடக்க உள்ள போட்டியில் சஞ்சு சாம்சன் இடத்தில் வெகுநாட்களாக வாய்ப்பிற்காக காத்திருக்கும் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதல் போட்டியில் உடல்நிலை சரி இல்லாமல் விளையாடாமல் இருந்த இடது கை பௌலர் அர்ஷ்தீப் சிங்கும் பங்கேற்பார் என்று கருத்துகள் வெளியாகி உள்ளது.

இந்த போட்டி தொடங்கும் முன் அணியில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களை ஹர்திக் பாண்டியா அறிவிப்பாரா என்று பொறுத்திருந்து காண்போம்.இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 2-0 என்ற வகையில் கைப்பற்றிவிடலாம் என்பதால் ரசிகர்கள் போட்டியை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.

இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமாக) : இஷான் கிஷன்(வி.கீ ), சுப்மன் கில்,சூரியகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹார்டிக் பாண்டியா(கேப்டன்),தீபக் ஹூடா,அக்சர் படேல்,உம்ரான் மாலிக்,ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங்,யுஸ்வேந்திர சாஹல்.