இந்தியா vs இலங்கை : 2வது ஒருநாள் போட்டி கணிப்புகள்,பிட்ச் அறிக்கை, பிளேயிங் 11 மொத்த விவரங்கள்.

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது,முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்ற நிலையில் நாளை நடைபெற உள்ள 2-வது போட்டியின் கணிப்புகள், வெற்றி வாய்ப்பு, பிளேயிங்-11 உள்ளிட்ட விவரங்களை விரிவாக காண்போம்.
இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் இமாலய இலக்கை பதிவு செய்து, அதன் பின் இலங்கை அணியை தனது மிரட்டல் பௌலிங்கால் சிதறடித்து வெற்றி பெற்றது.இந்நிலையில் அடுத்து நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி தனது வெற்றியை தொடருமா..? இல்லை இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா..? என்ற கணிப்புகளை காண்போம்.
2வது ஒருநாள் போட்டி விவரம் :
போட்டி : இந்தியா vs இலங்கை
தேதி : 12/01/2023 (வியாழக்கிழமை)
நேரம் : 1:30 p.m
மைதானம் : ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.
ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் & டிஸ்னி + ஹாட்ஸ்டார் (ஓடிடி ).
பிட்ச் அறிக்கை :
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை பொறுத்த வரை முழுக்க முழுக்க பேட்டிங் செய்வதற்கு சாதகமான தன்மையை உடையது என்று கூறலாம்.இந்த பிட்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சாரிசாரியாக 245 ரன்களை அடித்து உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த பிட்சில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இருக்கும் என்று தெரிகிறது,ஆனால் சமீப காலமாக வேகப்பந்து பவுலர்களுக்கும் உதவி உள்ளது.
2வது ஒருநாள் போட்டி வெற்றி கணிப்பு :
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் இலங்கை அணியின் பவுலர்களை சிதறடித்தார்கள் என்றே சொல்லலாம்,மேலும் ரோஹித்,கில் ,கோலி போன்ற வீரர்கள் நல்ல பார்மில் உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.இந்த இரண்டாவது போட்டியை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி என்று எதிர்பார்க்க படுகிறது.
அதே சமயத்தில் இலங்கை அணியை பொறுத்தவரை பாத்தும் நிஸ்ஸங்க, தசுன் ஷனக, ரஜிதா போன்ற வீரர்கள் முதல் ஒருநாள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் மற்ற வீரர்கள் கைகொடுத்தல் இரண்டாவது ஒருநாள் போட்டியை வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,ஆனால் தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் பொழுது இந்திய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(வி.கீ), அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.