இந்தியா vs இலங்கை : ஒரு நாள் போட்டி முதல் இன்னிங்ஸ் முடிவில்..! வலுவான நிலையில் இந்திய அணி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 10, 2023 & 17:40 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று முதல் ஒரு நாள் போட்டியில் கவுகாத்தியில் உள்ள பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள்.இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  வலுவான இலக்கை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக பௌலிங்கை தேர்வு செய்தார்,இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.

இந்திய அணியின் இளம் வீரர் கில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில் அற்புதமாக விளையாடி 70(60) ரன்களை அடித்து அவுட் ஆனார் ,அதேபோல் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் சிறப்பாக விளையாடி 3 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 83(67) ரன்களை அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஒருபுறம் நிதானமாக விளையாடி கொண்டிருக்க,மறுமுனையில் அணியின் வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர் ,கே.எல்.ராகுல்,ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி ஒருநாள் போட்டியில் தனது 45-வது சதத்தை பதிவு செய்தார்.

அதன்பின் கோலி 113(87) ரன்களை அடித்து 48.2 ஓவரில் ரஜிதா பவுலிங்கில் தனது விக்கெட்டை  பறி கொடுத்தார், இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை பதிவு செய்தது.