இந்தியா vs நியூசிலாந்து : முதல் டி20 போட்டியின் கணிப்புகள், பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்கள்..!

இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது, இதில் முதல் டி20 போட்டியின் கணிப்புகள், பிளேயிங் லெவன் மற்றும் பிட்ச் அறிக்கை உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை ரோஹித் சர்மா தலைமையில் ஆனா இந்திய அணி 3-0 என்று நிலையில் வெற்றி பெற்று அசத்தியது, அடுத்து ஹர்டிக் பாண்டிய தலைமையில் டி20 அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்ள உள்ளது.
டி 20 போட்டி விவரங்கள் :
போட்டி : இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி
நேரம் : 7:00 p.m (IST)
மைதானம் : ஜேஎஸ்சிஎ(JSCA) இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ்,ராஞ்சி.
நாள் & தேதி : வெள்ளிக்கிழமை & 27/01/2023.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் டி20 போட்டியில் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஎ இன்டர்நேஷனல் மைதானத்தில் விளையாட உள்ளார்கள்.இந்த மைதானத்தில் உள்ள பிட்ச் பேட்டிங் செய்ய மிகவும் உதவும் என்று தெரிய வந்துள்ளது.மேலும் போட்டியின் இரண்டாவது மைதானத்தில் பாதியில் டியூ வரும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பௌலிங்கை தேர்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு நாள் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மூலம் டி20 தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ராஞ்சி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி கணிப்பு :
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு நாள் தொடரை முடித்து விட்டு, அடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரில் இரு அணிகளும் புதிய கேப்டன்கள் தலைமையில் விளையாட உள்ளார்கள்.இந்திய அணி சமீப காலமாக டி20 தொடர்களில் வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரிலும் வழி நடத்த உள்ளார்.
இந்திய அணி டி20 தொடரில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு களமிறக்க போகிறது.இதுவரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி டி20 போட்டிகள் அசத்தி வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்த நிலையில் புதிய கேப்டன் மிட்செல் சான்ட்னர் தலைமையில் முதல் டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது,இந்நிலையில் டி20 தொடரில் தனது முதல் வெற்றி கைப்பற்ற முயலும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்த இரு அணிகளின் தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் பொழுது,உலகின் நம்பர் 1 டி20 அணியாக இருக்கும் இந்திய அணிக்கு தான் முதல் டி20 போட்டியில் வெற்றிக்கு அதிக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற இந்தியா vs நியூசிலாந்து டி20 போட்டிகள் விவரம் :
மொத்த போட்டிகள் : 22
இந்திய அணியின் வெற்றி : 12
நியூசிலாந்து அணியின் வெற்றி : 9
டிராவில் முடிந்த போட்டிகள் : 1
ரத்தான போட்டிகள் : 0
இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமாக) : சுப்மான் கில், இஷான் கிஷன்(வி.கீ), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சாஹல், குல்தீப் யாதவ்.
நியூசிலாந்து அணியின் பிளேயிங் 11 (தோராயமாக) : டெவோன் கான்வே, ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், டேன் கிளீவர்(வி.கீ), மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்.