இந்தியா VS நியூஸிலாந்து: 3-ஆவது தொடரிலும் வென்ற இந்தியா… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 22, 2022 & 17:00 [IST]

Share

3-வது டி 20 போட்டியின் முக்கியம் :

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20  போட்டி மெக்லீன் பார்க் மைதானத்தில்  நேப்பியர் சிட்டியில் நடந்தது. முதல் டி-20 போட்டி மழையினால் போட்டி நிறுத்தப்பட்டது தொடர்ந்து இரண்டாவது  டி -20 போட்டியில் இந்திய அணியின் சூர்யாகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி நியூஸிலாந்து அணியைத்  தோற்கடித்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும்  தொடரை சமன் செய்யும் நோக்கில்  நியூஸிலாந்து அணியும் விளையாடும் என்பதால் இன்றைய போட்டி அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மழையினால் ஆட்டம் தாமதம் :

மழையினால் இன்றைய போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் "கேன் வில்லியம்சன்" மருத்துவ காரணத்திற்க்காக ஆடமாட்டார் என்றும் அவர்க்கு பதிலாக "மார்க் சாப்மேன்"   அணியில் சேர்க்கப்பட்டார் என்றும், மேலும்  நியூஸிலாந்து அணியை "டிம் சௌத்தி" வழிநடத்துவார் என்பதும் முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்றுதான் . முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த  நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும்  மார்க் சாப்மேன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

பின்பு நிதானமாக விளையாடிய "டெவோன் கான்வே 59(49)" மற்றும் "க்ளென் பிலிப்ஸ் 54(33)"  இருவரும் அரைசதம் அடித்து அவர்களது அணி மொத்தம் 160 ரன்களை அடைய வழிசெய்தனர் . இந்திய அணியின் "அர்ஷ்தீப் சிங்" மற்றும் "முகமது சிராஜ்" தலா 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் உடனுக்குடன் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ்  நியூஸிலாந்து வீரர் இஷ் சோதியின் சுழலில்  13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அடுத்ததாக  நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் "ஹர்டிக் பாண்டியா" 30 ரன்களோடு  தீபக் ஹூடாவுடன் களத்தில் இருக்க மழையால் ஆட்டம் பாதியில்  நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நியூஸிலாந்து அணியின் "டிம் சௌதீ" இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

DLS முறையில் இந்திய அணி தொடரை வென்றது :

மழையினால் நிறுத்தப்பட்ட போட்டி தொடங்குவதற்கான நிலையில் வானிலை இல்லாததால் DLS முறையில் பார்க்கப்பட்ட பொது இந்திய அணியின் ஸ்கோர் ஒன்பது ஓவர்கள் முடிவில்  75/4 என்ற நிலையில் இருந்தது.

எனவே DLS முறை ஸ்கோரை இந்திய அணி எட்டிய நிலையில் இந்த ஆட்டம் "டை" ஆனதாக அறிவிக்கபட்டு இருஅணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டது.

இதனால்இந்த டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற வகையில் வென்றது. இந்த தொடரின் சிறந்த வீரராக "சூரியகுமார் யாதவ் " அறிவிக்கப்பட்டார். இந்த டி-20 தொடரின்  கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பெற்றார், இளம் வீரர்களின் இந்த வெற்றி இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியைத்  தருகிறது.