இந்தியா vs நியூசிலாந்து அணிகளின் முதல் ஒருநாள் போட்டியின் கணிப்புகள், பிளேயிங்-11, பிட்ச் அறிக்கை உள்ளிட்ட விவரங்கள்:

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 18, 2023 & 09:54 [IST]

Share

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடி வெற்றியை பெற்ற பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக  3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.இதில் முதல் ஒருநாள் போட்டியின் கணிப்புகள், பிட்ச் அறிக்கை , பிளேயிங் 11 குறித்த விவரங்களை காண்போம்.

இந்திய அணி நிலவரம் : 

இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகிறது,இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அதே போல் அசத்தி வெற்றிகளை பெறும் என்று பெரிதும் எதிர்பார்ப்பு எழுகிறது.

மேலும் கடந்த தொடரில் அணியின் வெற்றிக்கு உதவிய வீரர்கள் கே.எல் ராகுல், அக்சார் படேல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போன்றோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை எனவே அணியின் பிளேயிங் லெவனில் மாற்றும் இருக்கும்.

நியூசிலாந்து அணி நிலவரம் : 

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடைசி தொடரில் பாகிஸ்தான் அணியுடன் பெற்ற வெற்றியுடன் இந்திய அணியை சந்திக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டாம் லாதம் தலைமையில் களமிறங்கும் நியூஸிலாந்து அணியின் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி, அதன்பின் அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று அதிரடியை அரங்கேற்றியது.இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 

போட்டி குறித்த விவரங்கள் : 

போட்டி : இந்தியா vs நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி 

நேரம்     :   1:30 p.m (IST)

நாள்       : புதன்கிழமை (18/01/2023)

மைதானம்  : ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்.

ஒளிபரப்பு  : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

பிட்ச் அறிக்கை : 

இந்தியா  மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும்  முதல் ஒருநாள் போட்டி நடக்கும் ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் முழுமையாக பேட்டிங் செய்ய உகந்ததாக பிட்ச் என்று கூறப்படுகிறது, மேலும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 260 ரன்கள் அடிக்கும் என்று பதிவாகி உள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி கணிப்பு : 

இந்த முதல் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் வெற்றிக்கான வாய்ப்பு சமமாக உள்ளது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்கள் முந்தைய தொடரில் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த  தொடரில் இரு அணிகளுக்கு இடையிலும் அதிரடி போட்டி நிலவும், எனவே வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான) :  ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ ), விராட் கோலி, ஹர்திக் பாண்டியா(து.கேப்டன்), சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : பின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சேப்மேன், டாம் லாதம் (கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, பிளேயர் டிக்னர், லாக்கி பெர்குசன்.