இந்தியா vs நியூசிலாந்து : இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிரட்டல் ஆட்டம்..! ரோஹித் ,கில் ,பாண்டியா மாஸ்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 24, 2023 & 17:30 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் வலுவான ஆரம்பத்தை அளித்த போதும் அதை பெரிய  இலக்காக மாற்ற அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தவறி விட்டார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய தேர்வு செய்த நிலையில், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்  இருவரும் மிரட்டல் ஆனா ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பவுலர்களை திணறடித்தனர்.

ரோஹித் மற்றும் கில் இருவரும் அடுத்தது  சதம் அடித்து நியூசிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்கள்,பின் ரோஹித் 101(85) ரன்களில் ஆட்டமிழக்க ,அவரை தொடர்ந்து சுப்மன் கில் 112(78) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து  களமிறங்கிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷான், விராட் கோலி மற்றும் சூர்யா குமார் யாதவ் உடனுக்குடன் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார்கள்.இந்நிலையில் அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் அணியின் ஸ்கோரை  உயர்த்தினார்கள்.இந்திய அணியின் துணை கேப்டன் பாண்டியா பொறுப்புடன் விளையாடி 54(38) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 385 ரன்கள் பதிவு செய்தது. இந்திய அணியின் தொடக்கத்தை பார்த்த ரசிகர்கள் , கிரிக்கெட் நிபுணர்கள் உட்பட பலர் 400 ரன்களுக்கு மேல் இந்திய அணி பதிவு செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் சிறப்பான முறையில் பவுலிங்கில் கம்-பேக் கொடுத்த நியூசிலாந்து அணி ரன்களை கட்டுப்படுத்தியது.

இந்த போட்டி நடைபெறும் இந்தோர் ஹோல்கார் மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் உதவும் என்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பௌலிங் செய்வது சற்று கடினம் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் 3வது ஒருநாள்  போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.