இந்தியா vs நியூசிலாந்து : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..? தொடர்ச்சியான வெற்றிகள் தொடருமா..??

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டியில் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் விளையாட உள்ளார்கள் இரண்டு அணிகளும் இந்த போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகளை காண்போம்.
இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பான முறையில் வெற்றிகளை பெற்று வந்தாலும் இன்னும் முழுமையாக ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தேவையான திறனை அடைய வில்லை என்று தான் கூற வேண்டும்.இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றினாலும்,நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியை பெற திணறியது சற்று வருத்தத்தை அளிக்கிறது என்பது தான் உண்மை.
உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக விளங்கும் நியூசிலாந்து அணியுடன் மோதிய பொழுது தான் இந்திய அணியின் தவறுகள் வெளிப்பட்டதை காண முடிந்தது,இந்திய அணியின் முன்னணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறாத நிலையில் இந்திய அணியின் விளையாடி வருகிறது.
இந்நிலையில் அணியில் இடம் பெற்றிருக்கும் சூர்யா குமார் யாதவ், இஷான் கிசான் போன்ற வீரர்கள் தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்,மேலும் அணியின் பவுலர்களும் தங்களின் பவுலிங்கில் ஏற்படும் தவறுகளை சரி செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது,எனவே அடுத்து வரும் அனைத்து ஒருநாள் போட்டிகளில் நல்ல பங்களிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக கோப்பை தொடருக்கான நம்பிக்கையை பெற்று விடலாம் என்பதால் இந்த போட்டிகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று ராய்ப்பூரில் நடக்க விருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.