Representative Image.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறார்கள், அடுத்து ராய்ப்பூரில் நடக்க உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியின் கணிப்புகள், பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறது, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி தனது நிலையை இந்தியா அணி நிரூபித்தது.அதன்பின் உலகின் நம்பர் 1 அணியாக விளங்கும் நியூசிலாந்து அணியுடன் மோதிய முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் சந்திக்க உள்ள நிலையில், இந்த போட்டியின் சாத்திய கூறுகள் மற்றும் விவரங்களை காண்போம்.
2வது ஒருநாள் போட்டி விவரங்கள் :
போட்டி : இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி
மைதானம் : ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம், ராய்ப்பூர்.
நேரம் & நாள் : 1:30 p.m & சனிக்கிழமை (21/01/2023).
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெறும் ராய்ப்பூரில் உள்ள மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் ஏற்ற பிட்ச்,இதில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 280 ரன்கள் அடிக்கும் என்று பதிவாகி உள்ளது, பவுலர்களுக்கு அந்த அளவிற்கு இந்த பிட்ச் உதவாது என்று தெரிய வருகிறது.
இதனால் இந்த போட்டியில் இரு அணிகளும் பல வான வேடிக்கைகள் நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கண்டிப்பாக ஒரு பெரிய ஸ்கோர் போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.
வெற்றி கணிப்பு :
இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது, இந்த 2வது ஒருநாள் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் எனவே இந்திய அணி தனது முழு முயற்சியையும் இந்த போட்டியில் வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதேபோல் உலகின் நம்பர் 1 அணியாக விளங்கும் நியூஸிலாந்து அணியின் நல்ல பார்மில் தான் உள்ளது,மேலும் முதல் ஒருநாள் போட்டியில் நூலிழையில் தான் தோல்வியடைந்தது எனவே இந்த போட்டியில் வெற்றி பெற முழு வீச்சில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் சமமாக வாய்ப்பு உள்ளதாக தெரிந்தாலும் இந்திய மண்ணில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு சற்று வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs நியூசிலாந்து ஒரு நாள் போட்டிகள் விவரம்:
மொத்த போட்டிகள் : 114
இந்திய அணியின் வெற்றிகள் : 56
நியூசிலாந்து அணியின் வெற்றிகள் : 50
டிராவில் முடிந்த போட்டிகள் : 1
ரத்து ஆனா போட்டிகள் : 7
இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : பின் ஆலன், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & வி.கீ), க்ளென் பிலிப்ஸ்,மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.