இந்தியா vs நியூசிலாந்து : 2வது ஒருநாள் போட்டியில் வேகத்தில் மிரட்டிய இந்திய பவுலர்கள் ..! மிகுந்த சோகத்தில் நியூசிலாந்து ..!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் பல அதிரடிகள் நிலவும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ட்விஸ்ட் கொடுத்த மைதானம் அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் 2வது ஒரு நாள் போட்டியின் முதல் இன்னிங்சில் அரங்கேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தான் தேர்வு செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பௌலிங்கை தேர்வு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.ஏனென்றால் இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்ய அணிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு மாறாக பௌலிங்கை தேர்வு செய்த ரோஹித் சர்மா இதை ஒரு சவாலாக நாங்கள் செய்கிறோம், அனைத்து விதத்திலும் தயாராகும் வகையில் ஒரு பயிற்சியாக இதை செய்கிறோம் என்பதை போல் பதில் அளித்தார். ஆனால் இந்திய அணிக்கு சாதகமாக முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்து பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
இந்நிலையில் வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார் கள்,அடுத்து முதல் ஒருநாள் நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் 22 ரன்களில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் க்ளென் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் சான்ட்னர் பொறுப்புடன் விளையாடி அணியின் நிலைமை சற்று மாற்றினார்கள்.அதன்பின் மீண்டும் அதிரடியை வெளிப்படுத்திய இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் 108 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களையும்,ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.இந்திய அணி தனது அதிரடி பவுலிங்கில் நியூசிலாந்து அணியை துவம்சம் செய்தது என்று தான் கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது என்று ரசிகர்கள் குஷியுடன் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.