இந்தியா vs நியூசிலாந்து : 3வது ஒருநாள் போட்டி நடைபெறும் பிட்சில் உள்ள ட்விஸ்ட்..! ரசிகர்கள் ஆர்வம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 24, 2023 & 13:10 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் அதிரடி நிலவும் என்றும் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சூர்யா குமார், இஷான் கிஷான் ஆகியோர்  தொடர்ந்து சொதப்பி வருவதால் தங்கள் திறனை நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பாக இந்த போட்டி நிகழும் என்று எதிர்பார்க்க படுகிறது.    

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, மேலும் 3 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இருப்பதாக தெரிய வருகிறது. அதேபோல் நியூசிலாந்து அணியும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இருப்பது தெரிய வருகிறது.  

இதனால் 3-வது ஒருநாள் போட்டியில் பல வான வேடிக்கைகள் நிகழும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்கு முக்கிய  காரணம் போட்டி நடைபெறும் இந்தோர் பிட்ச் தான், இதுவரை இந்த மைதானத்தில் நடந்த போட்டிகள்    வைத்து பார்க்கும் பொழுது பேட்ஸ்மேன்கள் ஏற்ற சிறப்பான ஒரு பிட்ச் இது தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் பௌலர்கள் சற்று மோசமான ரெகார்டை இந்த பிட்சில் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோர் உள்ள ஹோல்கர் மைதானம் மிகவும் சிறிய பௌண்டரிகள் கொண்டுள்ளதால் இரு அணிகளும் அதிரடி பேட்டிங் வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சூரிய குமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் இரு அணிகளும் வெற்றி அடையும் நோக்கில் குறியாக இருப்பதால் அதிக ரன்கள் பதிவாகும் போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசையில் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.