இந்தியா vs நியூசிலாந்து : இறுதி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் புதிய யுக்தி..! ஒயிட் வாஷ் செய்ய வாய்ப்பு..!

இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் உலகின் முன்னணி அணியான நியூசிலாந்து அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது, இதை பயன்படுத்தி 3 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணியில் பல மாற்றங்களை ரோஹித் சர்மா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் 3வது ஒருநாள் போட்டியில் இந்தோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளன, இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை முழுமையாக இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணி முயற்சிக்கும் வேளையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்து தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உள்ளது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில், அணியில் உள்ள சில வீரர்களுக்கு ஓய்வு அளித்து புது வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தொடர்ந்து பல போட்டிகளில் பந்து வீசி வரும் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளித்து இளம் வீரர் உம்ரன் மாலிக் வாய்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதே போல் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வரும் சுபமன் கில் ஓய்வு அளித்து அந்த இடத்தில் இஷான் கிஷான் களமிறங்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடுத்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஷிகர் பாரத் அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் சிறந்த பார்மில் இருக்கும் சூழல் பந்து பவுலர் யுஸ்வேந்திர சாஹலுக்கு தனது திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் இடம்பெறுகிறது.
இந்திய அணியில் இத்தனை மாற்றங்களை எதிர்பார்க்காத நியூசிலாந்து அணி 3வது ஒருநாள் போட்டியில் தடுமாறினால் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஐசிசி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.