இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் ..?? போட்டியின் கணிப்புகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள்..!!
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க விருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி குறித்த கணிப்புகள், பிட்ச் அறிக்கை, பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய மண்ணில் விளையாட உள்ளது, இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை அறியவும் முதல் டெஸ்ட் போட்டியை காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
முதல் டெஸ்ட் போட்டி விவரங்கள் :
போட்டி : இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி
நேரம் : 9:30 a.m (IST)
மைதானம் : விதர்பா கிரிக்கெட் சங்க மைதானம், நாக்பூர்.
தேதி & நாள் : பிப்ரவரி 9- பிப்ரவரி 13 & வியாழக்கிழமை (முதல் நாள்).
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி + ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி முதல் டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த மைதானத்தின் பிட்ச் பொறுத்தவரை ஸ்பின் பவுலர்களுக்கு மிகுந்த சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்ய மிகவும் உதவும் என்று தெரிய வந்துள்ளது,குறிப்பாக முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணி 310 ரன்கள் சராசரியாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கணிப்பு :
இந்திய அணியை பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடர் வெற்றியை பொருத்து தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் நிலை குறித்து உறுதியாகும். இதனால் இந்திய அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை தனது சிறந்த பார்மில் உள்ளது அதற்கு எடுத்துக்காட்டாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வருடத்தில் ஆஸ்திரேலியா அணி மிரட்டலான பார்மில் இருப்பதாலும் கடைசியாக சில ஆண்டுகளாக நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுவதால் இந்த முறை அதனை மாற்றி அமைக்கும் முனைப்பில் முழு வீச்சில் ஆஸ்திரேலியா அணி செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் இந்திய மண்ணில் நடக்கும் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு சற்று அதிகம் என்று கிரிக்கெட் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் விவரம் :
மொத்த போட்டிகள் : 102
இந்திய அணி வெற்றிகள் : 30
ஆஸ்திரேலியா அணி வெற்றிகள் : 43
டிராவில் முடிந்த போட்டிகள் : 28
டை ஆனா போட்டி : 1
இந்திய அணி பிளேயிங் 11 (தோராயமான) : ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத், ஜடேஜா, அஸ்வின், சிராஜ், ஷமி, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி பிளேயிங் 11 (தோராயமான) : உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), நேதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன்.