பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்திய கிரிக்கெட் அணி.. இது வேற லெவல் சாதனை!!

Representative Image. Representative Image.

By Sekar Published: January 08, 2023 & 15:51 [IST]

Share

ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டின் முதல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

சாதனை என்ன?

நேற்று இலங்கைக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி, அந்நாட்டுக்கு எதிராக இந்தியா டி20 தொடரில் 19 வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 போட்டிகளில் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக ஒரு அணி பெற்ற அதிக வெற்றிகள் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற இங்கிலாந்தின் சாதனையையும் சமன் செய்தது. 

இந்தியா இலங்கைக்கு எதிராக 29 டி20 போட்டிகளில் 19 வெற்றிகளை பெற்ற நிலையில், இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு எதிராக அதே 29 போட்டிகளில் 19 வெற்றிகளை பெற்றுள்ளது. இரு அணிகளும் தற்போது முதலிடத்தில் உள்ளன.

இந்தியா - இலங்கைக்கு எதிராக 19 வெற்றிகள் (29 போட்டிகள்)

இங்கிலாந்து - பாகிஸ்தானுக்கு எதிராக 19 வெற்றிகள் (29 போட்டிகள்)

பாகிஸ்தான் - நியூசிலாந்துக்கு எதிராக 18 வெற்றிகள் (29 போட்டிகள்)

இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 17 வெற்றிகள் (25 போட்டிகள்)