இந்தியா vs வங்கதேசம் டெஸ்ட் : வங்கதேச வீரர்களின் தேவையில்லாத ஆரவாரத்தால் கடுப்பான விராட் கோலி..!

இந்திய மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது ,இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அமோக வெற்றி பெற்றது.அடுத்தாக இரண்டாவது டெஸ்ட் போட்டி ஷேர் பங்களா தேசிய மைதானதில் தொடங்கியது, இதில் இந்திய அணியின் விராட் கோலிக்கு வங்கதேச வீர்ர் தைஜுல் இஸ்லாமிற்கும் காரசார விவாதம் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது,இரண்டாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 314 ரன்களை அடித்து முதல் இன்னிங்ஸ் முடிவில் 87 ரன்களை லீடாக வங்கதேச அணிக்கு வழங்கப்பட்டது.
அதனை இரண்டாவது இன்னிங்சில் அடுத்துக் களமிறங்கிய வங்கதேச அணி 231 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்நிலையில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சற்று தடுமாறி தங்கள் விக்கெட்களை இழந்தார்கள்.
அதனை அடுத்துக் களமிறங்கிய விராட் கோலி நிதனமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 1(22) மெஹிதி ஹசன் மிராஸ் பௌலிங்கில் மொமினுல் ஹக்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்,அப்பொழுது வங்கதேச வீரர்கள் தேவையில்லாத ஆரவாரத்தால் ஈடுபட்டார்கள்.
இதனை அடுத்துக் கடுப்பான விராட் கோலி தைஜுல் இஸ்லாமிடம் சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,அடுத்தாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் கோலி இருவருக்கும் இடையில் சற்று வார்த்தை வாதம் நடந்தது அதன்பின் களத்திலிருந்து கோலி வெளியேறினார், இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதனை அடுத்து அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் வீரர்களுக்கு இன்னும் நாம் வெற்றி அடையவில்லை ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார்.
இறுதியாக இந்திய அணியின் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் இருவரின் பொறுப்பான ஆட்டத்தினால் இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வங்கதேசத்திற்கு எதிரான தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
மேலும் அடுத்தாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4-டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இதேபோல் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.