இந்தியா vs இலங்கை : குல்தீப், கே .எல்.ராகுல் அசத்தல்.. இந்திய அணி திணறல் வெற்றி..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பலபரிச்சை நடத்தினர்,இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும் அதே போல் இலங்கை அணி தனது முதல் பதிவு செய்ய போராடியது இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாக பேட்டிங்கை தேர்வு செய்தார்,முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை அடித்து இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுக்கலாம் என்ற அவரது கனவு பலிக்கவில்லை.இந்திய அணியின் பௌலர்கள் தங்களின் சிறப்பான பௌலிங்கால் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்திய அணிக்காக இந்த போட்டியில் களமிறக்கப்பட்ட இடது கை ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தனது இலங்கை அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை பெற்றார்,10 ஓவர்கள் வீசி 51 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை பெற்றார்,அதேபோல் வேகப்பந்து பௌலர்கள் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும், உம்ரன் மாலிக் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
அதிகபட்சமாக இலங்கை அணி சார்பில் நுவனிது பெர்னாண்டோ 50(63) ரன்களை அடித்தார், இறுதியாக இந்திய அணியின் மிரட்டல் பந்து வீச்சில் 39.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை பதிவு செய்தது.
அதன் பின் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர், இறுதிவரை நிதானமாக பொறுப்புடன் விளையாடிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 64*(103) ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 43.2 ஓவர்களில் 219 ரன்களை அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது, மேலும் இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த எளிய இலக்கை அடைய இந்திய வீரர்கள் சிரமப்பட்டாலும் இறுதியில் வென்று 2-0 என்ற நிலையில் இலங்கை எதிரான தொடரை கைப்பற்றியது சற்று நிம்மதியை அளிக்கிறது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.