இந்தியா vs நியூசிலாந்து : 3வது ஒருநாள் போட்டி கணிப்புகள் , பிட்ச் அறிக்கை , பிளேயிங் லெவன் உள்ளிட்ட முழு விவரங்கள்

இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இறுதியாக 3 வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் வெற்றி கணிப்புகள், பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து அணியை 2வது ஒருநாள் போட்டியில் சிதறடித்து வெற்றியை பெற்று 2-0 என்ற நிலையில் தொடரை கைப்பற்றியுள்ளது, இந்நிலையில் இறுதியாக 3 வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் விளையாட உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஒரு நாள் போட்டி விவரங்கள் :
போட்டி : இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி
நேரம் : 1:30 P.M (IST).
நாள் & தேதி : செவ்வாய் கிழமை & 24.01.2023.
மைதானம் : ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர்.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி + ஹாட்ஸ்டார்(ஓடிடி ).
பிட்ச் அறிக்கை :
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்கள் 3வது ஒருநாள் போட்டியை இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளார்கள்.
இந்த மைதானம் அதிரடியான பேட்டிங் செய்வதற்கு மிகவும் பேர் போனது, இதுவரை ஐந்து சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்துள்ளது இதில் பேட்ஸ்மேன்கள் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த பிட்சை பொறுத்தவரை இதுவரை நடந்த ஐந்து போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 300 ரன்களுக்கு மேல் பதிவாகி உள்ளது.இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் ரன் மழை பொழியும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி கணிப்பு :
இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற நிலையில் முன்னிலையில் இருப்பதால் 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு வெற்றி கூட அடையாமல் இருப்பதால் இறுதி ஒருநாள் போட்டியில் முழுவீச்சில் செயல்பட்டு வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க வேண்டும் என்று முயற்சிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை இந்திய அணிக்கு தான் 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் போட்டி விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 115
இந்திய அணியின் வெற்றிகள் : 57
நியூசிலாந்து அணியின் வெற்றிகள் : 50
டிராவில் முடிந்த போட்டிகள் : 1
ரத்தான போட்டிகள் : 7
இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமாக) : ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
நியூசிலாந்து அணியின் பிளேயிங் 11 (தோராயமாக) : பின் ஆலன், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & வி.கீ ), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.