IND vs NZ 2nd T20 : மரண அடி.. நியூசிலாந்தை துவம்சம் செய்து சதமடித்த சூர்யகுமார் யாதவ்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 20, 2022 & 14:31 [IST]

Share

IND vs NZ 2nd T20 : நியூசிலாந்தின் பே ஓவல், மவுன்ட் மவுங்கானுய் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். 

முன்னதாக, ​2022 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி 239 ரன்கள் குவித்த பிறகு, புது உத்வேகத்துடன் நியூசிலாந்து தொடரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் சதத்தை எட்டினார்.

அரை சதத்தை கடக்க 32 பந்துகளை எடுத்துக்கொண்ட சூர்யகுமார் அதற்கு கண்மூடித்தனமாக ஆடினார். இதன் மூலம் அடுத்த 17 பந்துகளில் சதத்தை கடந்தார். இறுதியில் அவர் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழ்க்காமல் இருந்தார். 

217.65 ஸ்டிரைக் ரேட்டில் அவர் பேட் செய்த அவர், எதிரணி கணிக்க முடியாத வகையில் புத்திசாலித்தனத்தோடு, ஏராளமான வழக்கத்திற்கு மாறான ஷாட்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்தின் மூத்த வீரர் டிம் சவுத்தி கடைசி ஓவரில் ஹாட்ரிக் மூலம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய பின்னரும் இந்தியா 191/6 ரன்கள் என்ற கடினமான ஸ்கோரை எட்ட முடிந்தது.

இந்தியாவுக்காக அதிக தனிநபர் டி20 ஸ்கோர்கள்

122*(61) விராட் கோஹ்லி vs ஆப்கன், துபாய் 2022
118(43) ரோஹித் சர்மா vs இலங்கை, இந்தூர் 2017
117(55) சூர்யகுமார் யாதவ் vs இங்கிலாந்து, நாட்டிங்ஹாம் 2022
111*(51) சூர்யகுமார் யாதவ் vs நியூசிலாந்து, மவுன்ட் மவுங்கானுய் 2022
111*(61) ரோஹித் சர்மா vs வெஸ்ட் இண்டீஸ், லக்னோ 2018

மேலும் சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையையும் தொடர்ந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், இந்த காலண்டர் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும்.