குல்தீப் சென்னுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இந்திய அணியில் சேர்ப்பு.. பிசிசிஐ அறிவிப்பு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 09, 2022 & 15:03 [IST]

Share

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்திய அணி பலவாறாக முயன்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் தோல்வியுற்று தொடரை இழந்தது மிகவும் வருத்தத்திற்குறிய உண்மை. அடுத்ததாக நாளை நடக்கவிருக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இவர் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் சிறப்பாகப் பந்து வீசி 4-விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்துக் கூடுதல் தகவலாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில், கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால் இறுதியாகக் களமிறங்கி அணியின் வெற்றிக்கு முயன்ற கேப்டன் ரோஹித் சர்மா,கடைசி ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாகர் மற்றும் குலதீப் சென் ஆகிய இருவரும்  காயம் காரணமாக விளையாடமாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ  அறிவித்துள்ளது.

இந்திய அணி இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் இறுதிப் போட்டியில் ஆறுதல் வெற்றியடைந்து ஒருநாள் தொடரை முழுமையாகத் தோற்காமல் இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் 
எதிர்பார்க்கப்படுகிறது.