IND vs BAN 2nd Test : ரிஷப் பண்ட்-ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி அபாரம்.. வலுவான நிலையில் இந்தியா?

IND vs BAN 2nd Test : இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடங்கியதும் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியதும் முதல் நாள் முடிவிற்கு வந்தது.
இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் விரைவாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள். அடுத்தாக களமிறங்கிய அணியின் முன்னனி வீரர்கள் புஜாரா மற்றும் கோலி சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள்.
இந்திய அணியின் நிலைமையை சற்று மாற்றும் விதமாக ஜோடி சேர்ந்த ரிஷாப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் கூட்டணி நிதனமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ரிஷாப் பந்த் 93(105) ரன்களில் ஆட்டமிழந்து தனது சதத்தை தவிர விட்டார். அவரை தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யரும் 87(105) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறக்குகிய வீரர்கள் உடனுக்குடன் தங்களின் விக்கெட்களை இழந்தநிலையில், இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 314 ரன்களை பதிவு செய்தது. அதிகபட்சமாக வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் தால 4-விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்திய அணி சார்பில் 87 ரன்கள் லீடாக இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்தாக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிங்கிய வங்கதேச அணி 7 ரன்களை அடித்த நிலையில் இரண்டாவது நாள் முடிவிற்கு வந்தது.