வங்கதேசம் ஆல் அவுட்.. அடி தூள்.. இலக்கு இவ்ளோதானா.. அப்ப வெற்றி நமக்கு தான்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 24, 2022 & 15:28 [IST]

Share

IND vs BAN 2nd Test : இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 145 ரன்களை நிர்ணயித்துள்ளது வங்கதேசம்.

முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி 22 ஆம் தேதி தொடங்கி, இன்று மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வங்கதேசத்தின் மொமினுல் ஹாக் மட்டும் அரைசதம் அடித்ததோடு 84 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளையும், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்ற ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்தியா, ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யரின் அபார பார்ட்னர்ஷிப்பால் 314 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இருவரும் முறையே 93 மற்றும் 87 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. வங்கதேச அணியில் லிட்டன் டாஸ் அதிகபட்சமாக 73 ரன்களும், சாகிர் ஹசன் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து 145 ரன்கள் எனும் எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாளுக்கும் மேல் ஆட்டம் மீதமிருப்பதால், இந்தியா எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.