அஸ்வின், உமேஷ் யாதவ் வெறித்தனம்.. பங்களாதேஷ் முதல் நாளிலேயே ஆல் அவுட்..!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 22, 2022 & 16:10 [IST]

Share

IND vs BAN 2nd Test : இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.

ஒன் டவுனாக களமிறங்கிய மொமினுல் ஹாக் அதிகபட்சமாக அரைசதம் அடித்து 84 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். ஆரம்பத்தில் நிலைத்து நின்று ஆட முற்பட்டாலும், 65வது ஓவருக்கு பிறகு அடுத்த 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்து விட்டது.

இதனால் 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த ஜெயதேவ் உனத்கட்டும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.