IND vs BAN 1st Test : முதல் இன்னிங்சில் இந்தியா அபாரம்.. புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 15, 2022 & 14:33 [IST]

Share

IND vs BAN 1st Test : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்னும் மீதம் உள்ள 6-டெஸ்ட் போட்டிகளில் கட்டாய வெற்றியை  நோக்கி விளையாட உள்ளது.

இந்நிலையில், வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2-டெஸ்ட் போட்டிகள்  மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகிய கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் நிதானமாக தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். அதன்பின் இந்திய வீரர் சுப்மன் கில் 20(40)  ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பிறகு களமிறங்கிய சேதேஷ்வர் புஜாராவுடன் சேர்ந்து கே.எல்.ராகுல் விளையாடிய நிலையில் 22(54) ரன்களை எடுத்திருந்தபோது, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் கலீத் அகமத்திடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்தாக களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி  யாரும் எதிர்பாராத விதமாக 1(5) ரன்களை மட்டும் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்பு ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரிசாப் பந்த் இருவரும் விளையாட தொடங்கினர்.

ஒருபக்கம் புஜாரா மிகவும் நிதானமாக விளையாடி கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 46(45) ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அதன் பிறகு சோர்ந்திருந்த இந்திய அணியை வலுப்படுத்தும் விதமாக ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

இந்தியா அணியின் தூணாக இதுவரை செயல்பட்டு வந்த புஜாரா 90(203) ரன்களை அடித்திருந்த நிலையில் சதம் அடிக்க முடியாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் களமிறங்கிய அக்சர் பட்டேல் வெறும் 14(26) மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினர். 

ஷ்ரேயாஸ் அய்யர் 82*(169) ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க இந்திய அணி 278-6 ரன்களை எடுத்திருந்த நிலையில்  போட்டியின் முதல் நாள் முடிவடைந்தது.

அதன்பின்  தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் களமிறங்கி நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஷ்ரேயஸ் அய்யர் 86(192) ரன்களை எடுத்து சதம்  அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். 

பின்பு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை  ஏற்றினார்கள். இந்த போட்டியில் அரைசதம் கடந்த அஸ்வின் 58(113)  ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பிறகு குல்தீப் யாதவும் 40(114) ரன்களை அடித்து தனது விக்கெட் பறிகொடுத்தார்.

இந்நிலையில் அடுத்தாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 133.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 404 -10 ரன்களை எடுத்தது. 

வங்கதேச அணி சார்பில் தைஜுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4-விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதையடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை வங்கதேசம் தொடங்கியுள்ளது