இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் : ஆஸ்திரேலியா தொடரை எதிர்கொள்ள புஜாராவின் யுக்தி ...! அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மீதான எதிர்பார்ப்பு இந்த முறை மிகவும் அதிகரித்துள்ளது, இதற்கு காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்று தாக்கம் தான். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் தூண் செதேஷ்வர் புஜாரா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய மண்ணில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் சில ஆண்டுகளாக இந்திய அணி வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றி அசத்தி வரும் நிலையில் அதனை மாற்றி அமைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி இம்முறை முழு வீச்சில் செயல் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த தொடரின் வெற்றி மிகவும் முக்கியம் எனவே தனது முழு திறனையும் அளித்து இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கும் என்பது உறுதி.இந்த தொடர் ஆரம்பிக்கும் முன் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் காப்பானாக விளங்கி வரும் செதேஷ்வர் புஜாரா இந்த தொடர் குறித்து தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார், ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை சமாளிக்க யுக்திகளை தயார் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்த முறை ஆஸ்திரேலியா அணி நல்ல பார்மில் உள்ளது, அவர்களை எதிர்கொள்ள சில யுக்திகளை கையாள வேண்டும் குறிப்பாக ஆஸ்திரேலியா பவுலர்களை சந்திக்க ஒரு பேட்ஸ்மேனாக எதிர் ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக வேண்டும் என்று கூறினார்.
இதுவரை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய அணி சார்பில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் செதேஷ்வர் புஜாரா தான் என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தான் என்பது உறுதி.
இந்த 2023 பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இந்திய அணிக்கு பக்கபலமாக செதேஷ்வர் புஜாரா இருப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் ரசிகர்கள் உட்பட பலரும் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.