IND VS AUS TEST SERIES 2023 : இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவது கடினம் தான்..! வார்னர் , ஸ்மித் கருத்து..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் வார்னர் மற்றும் ஸ்மித் இந்த தொடர் குறித்து தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த முறை நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தான் கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி என்பதால், இந்த தொடரில் யார் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை கடைசியாக நடைபெற்ற மூன்று பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது, மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாற்றில் இடம் பிடித்தது குறிப்பாக 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றிகள் மட்டுமே அடைந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆஷஸ் தொடரை விட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது என்று கூறினார்கள். அடுத்து தொடர்ந்து பேசிய ஸ்டீவ் ஸ்மித் இந்திய மண்ணில் 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றவில்லை எனவே இந்திய போன்ற ஒரு சிறந்த அணியை அதன் சொந்த மண்ணில் சாய்ப்பது சவாலான காரியம் என்று கூறினார்.
அதன்பின் பேசிய வார்னர் இந்த தொடரை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் இந்திய அணியை எதிர்கொள்வது எப்போதும் கடினமான விஷயம் தான், இந்த முறை இந்திய அணியின் தலைசிறந்த ஸ்பின்னர்கள் எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளேன் என்று கூறினார்.
ஆஸ்திரேலியா அணி தனது சிறந்த பார்மில் இருப்பதால் இந்த முறை கண்டிப்பாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது என்று தெளிவாக தெரிகிறது, மேலும் இந்திய அணியும் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடுவதால் ஒரு அதிரடி ஆட்டத்தை இந்த தொடரில் எதிர்பார்க்கலாம் என்பதில் ஐயமில்லை.