ind vs aus 2023 test series : டெஸ்ட் தொடரில் இந்திய அணி புதிய யுக்தியை கையாள திட்டம்..! அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது, இதற்கு காரணம் இந்த தொடரில் இரு அணிகளும் கண்டிப்பாக வெற்றியை அடைய வேண்டும் என்று முழு வீச்சில் செயல்படுவது தான், இந்த தொடரை எதிர்கொள்ள இந்திய அணி சார்பில் புதிய யுக்தியை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது, எனவே ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரிஷாப் பந்த் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் டெஸ்ட் தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்கும் திறன் உடைய வீரர், இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் ரிஷாப் பந்த் போல் ஸ்வீப் ஷாட் விளையாடி ஸ்பின் பவுலிங் எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்கு ஸ்வீப் ஷாட் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.