ICC T20 World Cup 2022 NZ vs SL : ஆசிய சாம்பியனை அதகளம் பண்ணிய நியூசிலாந்து.. 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
ICC T20 World Cup 2022 NZ vs SL : ஐசிசி டி20 போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
சிட்னி மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் பேட்டிங்கில் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்கார்கள் பின் ஆலன் மற்றும் டேவன் கான்வே தலா 1 ரன்களில் வெளியேற, ஒன் டவுனாக வந்த கேன் வில்லியம்சனும் 8 ரன்களில் வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்தின் சோலி முடிந்தது என அனைவரும் நினைக்க, அடுத்து கூட்டணி சேர்ந்தனர் கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி. இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்து நொடிந்து போன நியூசிலாந்தை மீட்டெடுத்தனர்.
மிட்செல் 22 ரன்களில் அவுட்டானாலும், கிளென் பிலிப்ஸ் கடைசி ஓவர் வரை நின்று விளையாடி 104 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 168 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஆசிய சாம்பியன் இலங்கை அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தது. இலங்கை அணியில் பாணுகா ராஜபக்சேவும், தசுன் சனாகவும் முறையே 34 மற்றும் 35 ரன்கள் எடுத்தனர்.
மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே ரன் எடுத்து வெளியேறிய நிலையில், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.