ஐ.சி.சி டி-20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்..! சூர்யா குமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 06, 2023 & 11:00 [IST]

Share

ஐ.சி.சி நிர்வாகம் டி-20 தொடரின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது, அண்மையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்,இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சம நிலையில் உள்ளார்கள்.

இந்த தரவரிசை பட்டியலில் சிறப்பாக இந்த ஆண்டின் முதல் டி-20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் பல இடங்கள் முன்னேறி உள்ளார்கள்,குறிப்பாக அதிரடியாக விளையாடி இலங்கை எதிரான போட்டியில் 37 ரன்கள் அடித்த இந்திய வீரர் இஷான் கிஷான் 10 இடங்கள் முன்னேறி 567 23-வது இடத்தில் உள்ளார்.

அதே போல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் வகையில் 41*(23) ரன்கள் அடித்த ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா 40-இடங்கள் முன்னேறி 97-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணியின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யா குமார் யாதவ் இலங்கை எதிரான போட்டியில் பெரிதாக ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் தொடர்ந்து 883 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி அசத்தி வரும் வனிந்து ஹசரங்க தொடர்ந்து பௌலர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் தரவரிசை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியின் மார்ன்ஸ் லாபுசேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்,ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம்  அவரை  சீக்கிரமாக நெருங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

நேற்றைய 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி இறுதி வரை முயன்றும் தோல்வியை தழுவியது ,இந்நிலையில் அடுத்து வரும் இலங்கைக்கு எதிரான கடைசி  டி-20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.