இனி சூப்பர் 12 கிடையாது.. டி20 உலகக்கோப்பையில் புதிய விதிகளை கொண்டு வந்த ஐசிசி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 23, 2022 & 17:39 [IST]

Share

இது வரை 16 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த டி20 உலகக்கோப்பையில், அடுத்த உலகக்கோப்பை முதல் 20 அணிகளுடன் காலிறுதி சுற்று உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ஐசிசி கொண்டு வர உள்ளது.

கிரிக்கெட் இந்தியாவில் புகழ் பெற்றதாக இருந்தாலும், உலக அளவில் கிரிக்கெட்டை முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக வைத்து விளையாடக்கூடிய நாடுகள் வெகு சில தான் உள்ளன. தற்போது இது மாறி வரும் நிலையில், கிரிக்கெட்டை அனைத்து உலக நாடுகளிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், 2024 உலகக்கோப்பையில் புதிய விதிகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது.

அடுத்த உலகக்கோப்பை 2024-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளன. இந்நிலையில் அதில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களை இதில் பார்க்கலாம்.

உலகக்கோப்பையில் பழைய நடைமுறையும் புதிய மாற்றங்கள் :

அமெரிக்கா நாடு முதல் முறையாக 2024-ஆம் ஆண்டில் அடுத்த டி -20 உலகக்கோப்பையை  மேற்கிந்திய தீவுகளோடு சேர்ந்து நடத்துகிறது. வழக்கமாக டி -20 உலகக்கோப்பை தொடரில் 16 அணிகள் போட்டியிடும். இதில்  ஐ.சி.சி தரவரிசைப்படி  முதலில் உள்ள 8 அணிகள் நேரடியாக தகுதி பெரும். மீதம் உள்ள 8 அணிகளில் போட்டியின் மூலம் 4 அணிகள் தேர்தடுக்கப்பட்டு சூப்பர்-12 சுற்றில் பங்கேற்கும்.

அதில் இந்த 12 அணிகளை இரு பிரிவுகளாக ஒரு குரூப்பில் 6 அணிகளும் மற்றொரு குரூப்பில் 6 அணிகளும் இடம் பெறுமாறு பிரிக்கப்படும். அதன் பின்பு அந்த இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். இறுதிப்போட்டியில் இந்த நான்கு அணிகளில் 2 அணிகள் பங்குபெற்று ஒரு அணி கோப்பையை வெல்லும்.

இந்த பழைய நடைமுறையை மாற்றி வரும் 2024 உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்கு பெரும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் பங்குபெறும் 20 அணிகளை நான்கு பிரிவுகளாக  ஒரு பிரிவில் ஐந்து அணிகள் இடம்பெறும் வகையில் பிரிக்கப்படும். அந்த நான்கு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளை வைத்து "சூப்பர்-8" போட்டியின் மூலம் நான்கு அணிகளை தேர்வுசெய்யப்பட்டு  வழக்கம்போல் அரைஇறுதியும் இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதியமாற்றத்தின் முக்கிய நோக்கம் :

ஐ.சி.சி-யின் இந்த புதிய நடைமுறைக்குக்  காரணமாக கூறப்படுவது என்னவென்றால் போட்டியில் உள்ள சிறிய அணிகள் பெரிய அணிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே அந்த அணிகளின் அனுபவமும் அதிகரிக்கும். அந்த அணிகளுக்கு ஒரு நம்பிக்கையாக இந்த தொடர் அமையும். மேலும் அனைத்து அணிகளின் போட்டிகளும் அதிகரிக்கும். 

ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை அதிகரிப்பதன் மூலம் கிரிக்கெட்டையும், கால்பந்து போல இன்னும் பல நாடுகளிடம் கொண்டு சேர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.