முகமது ரிஸ்வானைப் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த சூர்யகுமார் யாதவ்!

Representative Image. Representative Image.

By Priyanka Hochumin Published: November 02, 2022 & 16:15 [IST]

Share

சமீபத்திய ஐசிசி தரவரிசை புதுப்பித்தலில், முகமது ரிஸ்வானைப் பின்னுக்கு தள்ளி டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் புதிய நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஆடவர் T20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் செம்ம ஃபார்மில் உள்ளார். இவர் முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் சூரியகுமார் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இப்படி அடித்து பொலந்து கட்டிய சூர்யகுமார் 2022 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 935 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இப்படி அபாரமாக விளையாடிய சூரியகுமார் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சூர்யகுமாரைத் தவிர, ரிலீ ரோசோவ் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோரும் புதிதாக முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்தனர். பங்களாதேஷுக்கு எதிரான ரோசோவின் சதம் அவரை 17 இடங்கள் முன்னேறி பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பிலிப்ஸின் அடித்த சதம் அவரை ஐந்து இடங்கள் முன்னேறி பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இது பேட்டர்களைப் பற்றிய தகவல்கள். ஆனால் பௌலர்களைப் பற்றி பார்க்கையில், வனிந்து ஹசரங்க தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஷித் கானுடனான இடைவெளியைக் குறைத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் செவ்வாயன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் வெற்றியில் ஹசரங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களைத் தவிர சாம் கர்ரன் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய மற்ற பந்துவீச்சாளர்களாவர்.