டெஸ்ட் தரவரிசையில் ஐசிசி செய்த குழப்பம்..!! சோதனையில் முடிந்த இந்திய அணியின் சாதனை..!! அதிருப்தியில் ரசிகர்கள்..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை அடைந்த நிலையில் அனைத்து தொடர்களிலும் முதல் இடம் பிடித்த அணி என்ற மாபெரும் சாதனையை இந்திய அணி படைத்தது என்று ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், சற்று நேரத்திலேயே ஐசிசி தரவரிசையில் மறுபடியும் மாற்றும் செய்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்திய அணி ஐசிசியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து புள்ளிகளில் மாற்றம் பெற்று டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடம் பெற்றதாக ஐசிசி தரவரிசையில் மாற்றம் செய்தது.
அதாவது டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை 115 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கும் ஆஸ்திரேலியா அணியை 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு மாற்றி புதிய டெஸ்ட் தரவரிசையை ஐசிசி வெளியிட்டது.
அதன் பின் சற்று நேரத்தில் மீண்டும் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணியும் 115 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி மாற்றம் செய்து வெளியிட்டது.
இந்த குழப்பம் குறித்து விளக்கம் அளித்த ஐசிசி தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டதாக கூறியது, இந்நிலையில் இந்திய அணி சர்வதேச அளவில் பெரும் சாதனை படைத்ததாக எண்ணி மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள், எனினும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றால் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது,
இந்திய அணி கூடிய விரைவில் இந்த சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்து விளையாட உள்ள டெல்லி டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.