ஐசிசியின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 அணி வெளியானது..! மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்று அசத்தல்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 23, 2023 & 16:00 [IST]

Share

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான பயணத்தில் மிகவும் சிறப்பான வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை பெற்று வருகிறது, இந்நிலையில் ஐசிசி கடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் மற்றும் மகளிர் டி20 அணியை வெளியிட்டுள்ளது.

இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அரையிறுதி போட்டியில் மோசமான தோல்வி அடைந்து வெளியேறியது, இதனால் இந்திய அணியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது, ஆனால் இந்திய அணி சார்பில் மூன்று  வீரர்கள்  ஐசிசி வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

இந்திய அணியில் இருந்து விராட் கோலி, சூர்யா குமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் ஐசிசி அறிவித்த சிறந்த ஆடவர் டி20 அணியில் இடம் பெற்றுள்ளார்.இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சிலர் காயத்தினால் உலக கோப்பை விளையாட நிலையில் அரை இறுதி வரை சென்ற இந்திய அணி முக்கிய போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி தொடரில் இருந்து வெளியேறியது.

அதே சமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், மேலும் தற்போது  உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யா குமார் யாதவ் உலக கோப்பை தொடரில் மட்டும் இல்லாமல் ஆண்டு முழுவதும் நடந்த டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக விளங்கும் ஹர்திக் பாண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் எனவே இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்கள் 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

ஐசிசி மகளிர் டி20 அணியில் இடம் பெற்ற வீராங்கனைகள் :    

அதேபோல் மகளிர் அணியில் கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக டி20 போட்டியில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் உள்ளிட்ட வீராங்கனைகள் ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார், குறிப்பாக இந்திய மகளிர் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டில் 5 அரைசதங்கள் உட்பட 594 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா பவுலிங்கில் 29 விக்கெட்டுகள் கைப்பற்றி  370 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார், பெண்கள் ஆசிய கோப்பையில் 13 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிச்சா கோஷ் தான் விளையாடிய 18 போட்டிகளில் 259 ரன்கள் அடித்து 150 ஸ்ட்ரைக் ரேட் உடன் 2022 வருடம் முழுவதும் அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் மூவரும் ஐசிசி யின் சிறந்த மகளிர் டி20 அணியில் இடம்பெற்று  இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐசிசி அறிவித்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20 ஆடவர் அணி 

ஜோஸ் பட்லர் (கேப்டன் & வி.கீ ), முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, சாம் கர்ரன், வனிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ரவூப், ஜோஷ் லிட்டில்.

ஐசிசி அறிவித்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த டி20  மகளிர்  அணி 

ஸ்மிருதி மந்தனா, பெத் மூனி, சோஃபி டேவின் (கேப்டன்), ஆஷ் கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், நிடா டார், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (வி.கீ), சோஃபி எக்லெஸ்டோன், இனோகா ரணவீர, ரேணுகா சிங்.