Representative Image.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்து சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஹாசிம் ஆம்லா அனைத்து வகையான கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார், அவரின் கிரிக்கெட் பயணத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு படைத்த சாதனைகளை நினைவு கூறி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஹாசிம் ஆம்லா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத மைல் கல்லை பதித்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், இவர் 2019-ஆம் ஆண்டில் தனது 39-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். மேலும் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் அனைத்து தரப்பு போட்டிகளிலும் 2004-2019 ஆண்டு வரை விளையாடிய ஆம்லா 18,672 ரன்களை அடித்து குவித்துள்ளார்.
ஹாசிம் ஆம்லா டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார், முதல் இடத்தில் தென்னாபிரிக்காவின் லெஜெண்ட் ஜாக் காலிஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆட்டமிழக்காமல் 311 ரன்கள் இவர் அடித்தது தான் இன்று வரை தென்னாபிரிக்கா வீரர் ஒருவரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் ஓய்விற்கு பிறகு சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் இணைந்து பயணித்த ஹாசிம் ஆம்லா தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இவரது கிரிக்கெட் பயணம் என்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடத்தை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.