ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்து ஹார்ரி புரூக் அசத்தல்..!! | harry brook century in ipl

ஐபிஎல் அரங்கில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி வீரர் ஹார்ரி புரூக் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐடென் மார்க்கரம் தலைமையில் ஆன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழிந்தார்கள். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் அணி இளம் வீரர் ஹார்ரி புரூக் கொல்கத்தா அணி பவுலர்களை துவம்சம் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிய இலக்கை பதிவு செய்யும் வகையில் அசத்தலாக விளையாடிய ஹார்ரி புரூக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உட்பட 100 ரன்கள் பதிவு செய்தார். ஐபிஎல் அரங்கில் முதல் முறையாக விளையாடி வரும் ஹார்ரி புரூக், 2023 தொடரில் முதல் சதத்தை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை அடைய இறுதி வரை முயன்றும், ஹைதெராபாத் அணி முன்னணி பவுலர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணியின் ஹோம் கிரௌண்டில் அசத்தல் வெற்றியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.