WOMEN T20 WORLD CUP 2023 : இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் ரோஹித் சர்மாவை பின்தள்ளி உலக சாதனை படைத்தார் ..!!

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடிய டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் மாபெரும் உலக சாதனையை படைத்தார்.இந்திய அணியின் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் ஹர்மன் ப்ரீத் கவுர் பாராட்டி வருகிறார்கள்.
உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் விளையாடிய போது, சர்வதேச அளவில் 150 டி20 போட்டியில் விளையாடிய முதல் கிரிக்கெட் பிளேயர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ள ஹர்மன் ப்ரீத் கவுர் தனது 33 வயதில் இந்த மாபெரும் மைல்கல்லை அடைந்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் 3000 ரன்கள் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சர்வதேச அளவில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 143 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.மேலும் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 148 டி20 போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்திலும்,பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 124 டி20 போட்டிகளில் பங்கேற்று 2வது இடத்திலும், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் 122 டி20 போட்டிகளில் பங்கேற்று 3 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.