ஐசிசி டி20 தரவரிசையில் தொடர்ந்து முன்னேறும் இந்திய வீரர்கள்..! சூர்யா குமார் கில் ,ஹர்திக் பாண்டியா அசத்தல்..!

இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது, இந்திய அணி தற்போது புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்று வருகிறது.அண்மையில் வெளியான ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.
பிசிசிஐ நிர்வாகம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையை மனதில் இளம் வீரர்கள் அடங்கிய புதிய டி20 இந்திய அணியை உருவாக்கும் முனைப்பில் முழுவீச்சில் இறங்கி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் இந்திய டி20 அணியை 2022 உலக கோப்பைக்கு பின்னர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் வழி நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது, மேலும் தற்போது வெளியான ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யா குமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வரும் இளம் வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.இந்த போட்டியில் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 126(63) ரன்கள் பதிவு செய்தார், இதன்மூலம் 168 இடங்கள் தாண்டி 30 இடத்திற்கு முன்னேறி அசத்தினார் வெறும் 6 டி20 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளார்.பாண்டியா டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஷாகிப் அல் ஹசன் விட 2 புள்ளிகள் தான் குறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி டி20 அணியில் இருக்கும் வீரர்கள் பங்களிப்பையும் அவர்கள் அதிரடி ஆட்டத்தையும் பார்க்கும் பொழுது, வருங்கால இந்திய அணி சிறந்த வீரர்கள் கையில் தான் உள்ளது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.