புத்தாண்டு சபதம் இது தான்.. ஹர்திக் பாண்டியா கூறியதை கேட்டு மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 03, 2023 & 10:32 [IST]

Share

இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3-டி20 மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்த ஆண்டு துவக்கத்தில் விளையாட உள்ளது,இதில் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த தொடரில் முதல் டி-20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 7:00 மணி அளவில் தொடங்கவுள்ளது.

அதில் இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல் இலங்கை அணியும் போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது தெரிகிறது.

இந்திய டி-20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அண்மையில் அளித்த பேட்டியில் இந்த ஆண்டில் தன்னுடைய சிறப்பான முழு பங்களிப்பை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்வேன் என்று  தெரிவித்தார்,மேலும் தன்னுடைய நியூயர் ரெசலூசனே இந்திய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையைப் பெற்று தருவது தான் என்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த டி-20 உலகக்கோப்பைக்கு மிகமும் சிறப்பான முறையிலே இந்திய அணி தயாரானது,ஆனால் அந்த தொடரில் நாங்கள் எதிர்பார்த்ததை போல் ஏதும் நடைபெறவில்லை அது மிகவும் வருத்தமாக இருந்தது.

இந்திய அணி ஐ.சி.சி கோப்பை பெற்றுப் பல ஆண்டுகள் ஆகிறது அந்த ஏக்கம் இந்த முறை சரி செய்யப்படும்,ஒருநாள் உலகக்கோப்பையைக் கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்றார் பாண்டியா.

அதற்காகத் தனது முழு பங்களிப்பையும் அளிக்கப் போவதாகவும் கூறினார்.இவரின் வார்த்தைகளைக் கேட்ட இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்திலும் ஆனந்தத்திலும் உள்ளார்கள்.          

அதன்பின் நீங்கள் டெஸ்ட் போட்டியில் எப்போது களமிறங்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முதலில் நான் முழுமையாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளை அணிக்காகச் சிறப்பான பங்களிப்பை அளித்த பிறகு,டெஸ்ட் அணியில் மீண்டும் களமிறங்குவதை பற்றி யோசிப்பேன் என்று கூறினார்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு அனைத்து தொடர்களில் இடம்பெற்று அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக செய்யப்பட்டு வந்தார்,அதன்பின் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்.

பாண்டியா ஓய்விலிருந்து திரும்பியதற்கு பிறகுத் தனது முழு கவனத்தையும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் செலுத்தி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாண்டியா கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்திய டி-20 அணியை சில தொடர்களில் வழிநடத்தி வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்,மேலும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையிலேயே சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்து அசத்தினார்.அதன் பிறகே இந்திய டி-20 அணிக்காக கேப்டன் பதவி இவருக்கு வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியாவின் நம்பிக்கையான பேச்சையும் அவரது நியூயர் ரெசலூசனையும் கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்,மேலும் அவரது பதிவை இணையத்தில் பகிர்ந்து தங்களின் ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.