இந்தியா vs இலங்கை 3டி20 : ஹர்திக் பாண்டியாவின் புதிய வியூகம் ..! பிளேயிங் 11-ல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்.??

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 07, 2023 & 13:00 [IST]

Share

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்றும் என்பதால், இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது.இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியின் முக்கிய துவத்தை கருதி பல அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்தியா  மற்றும் இலங்கை அணிகள் இன்று ராஜ்கோட்டில் 3-வது டி20 போட்டியில் பலபரிச்சை நடத்தவுள்ளது,இந்த போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தங்களின் முழு முயற்சியை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா ,இந்த போட்டியின் முக்கியத்துவத்தை  கருதி அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில்க  இரண்டு போட்டியிலும் சரியாக விளையாட நிலையில் அவருக்கு பதிலாக ருதுராஜ் கைக்வாட் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதன்பின் ராஜ்கோட் மைதானம் சூழல் பந்து வீச்சுக்கு மிகவும் உதவும் என்பதால்,கடைசி போட்டியில் பவுலிங்கில் சொதப்பிய அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது,அவரின் வருகை அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய அணியில் இந்த மாற்றங்களை பாண்டியா  செய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான நிலையில்,எதிலும் புது விதமாக யோசிக்கும் பாண்டியா என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.