ஐ.பி.எல் 2023: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பிளேயிங்-11 வெளியானது..?? இந்த முறையும் சம்பவம் இருக்கு ..!

ஐ.பி.எல் மினி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது,பிறகு பேஸ் பௌலர் ஜோசுவா லிட்டிலையும் வாங்கி அணிக்கு பலம் சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது,அதனால் இந்த வருட மினி ஏலத்திற்கு முன் ஒரு சில வீரர்களை மட்டும் விடுவித்து பழைய அணியை அப்படியே தக்கவைத்து கொண்டது.
ஹர்டிக் பாண்டியா தலைமையில் ஒரு மிரட்டலான அணியாக குஜராத் டைட்டன்ஸ் ஐ.பி.எல் தொடரில் உள்ளது என்பதில் ஐயமில்லை.
இதனை அடுத்து மினி ஏலத்தில் ஒரு சில வீரர்களை மட்டும் குறிவைத்த குஜராத் அணி நிர்வாகம்,அதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை அடைந்தது என்றே சொல்லலாம்குஜராத் அணி மொத்தமாக ஏழு வீரர்களை ஏலத்தில் வாங்கியது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக இந்திய பௌலர் சிவம் மாவி 6- கோடிக்கு,அயர்லாந்து பௌலர் ஜோசுவா லிட்டில் 4.4 கோடிக்கும் வாங்கப்பட்டார்கள்.மேலும் ஆல்ரவுண்டர் இடத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒடியன் ஸ்மித்தை 50 லட்சத்திற்கு வாங்கி அணியை பலப்படுத்தினார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின்தோராயமான பிளேயிங்-11 இணையதளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.அடுத்த ஐ.பி.எல் தொடரில் மிகவும் அதிரடியான அணியாக குஜராத் டைட்டன்ஸ் வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோராயமான பிளேயிங்-11 : ஷுப்மான் கில்,ஸ்ரீகர் பாரத்,கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர்,ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி,யாஷ் தயாள்,அல்ஜாரி ஜோசப்,ஆர். சாய் கிஷோர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
விக்கெட்கீப்பர்கள் : மேத்யூ வேட்(ஆஸி),ஊர்வில் படேல்,விருத்திமான் சாஹா,ஸ்ரீகர் பாரத்.
பேட்ஸ்மேன்கள் : ஷுப்மான் கில்,டேவிட் மில்லர்(தெ.ஆ), அபினவ் மனோகர், சாய் சுதர்சன்,கேன் வில்லியம்சன் (நியூசி).
ஆல்ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா(கேப்டன்),விஜய் ஷங்கர்,ஜெயந்த் யாதவ்,ராகுல் தெவாடியா,ஒடியன் ஸ்மித்(மேற்.தீவுகள்)
பௌலர்கள் : ரஷித் கான் (ஆப்கான்),தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான் , நூர் அகமது(ஆப்கான் ),சிவம் மாவி, ஜோசுவா லிட்டில்(அயர்லாந்து),மோஹித் ஷர்மா,முகமது ஷமி,அல்ஜாரி ஜோசப் (மேற்.தீவுகள் ),ஆர். சாய் கிஷோர்,யாஷ் தயாள்.