ஓட்ட வாய் கம்பீர்.. ஒரே ஒரு கருத்தால் வந்த வினை.. கரித்துக் கொட்டும் வீரர்கள்?

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கவுதம் கம்பீர் கூறிய கருத்துகளால் இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் போன்ற மூத்த வீரர்களைத் தாண்டி தேசிய தேர்வாளர்கள் பார்க்கிறார்கள் என்றால், அப்படியே இருக்கட்டும், ஆனால் மூத்த வீரர்களை ஏன் பதற்றப்பட வைக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியிருந்தார்.
கம்பீரின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ மற்றும் அணியின் சில உதவி ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஒருவர், இது குறித்து கூறுகையில் கம்பீரை "லவுட்மவுத்" அதாவது ஓட்ட வாய் என்று திட்டியுள்ளதாக பிரபல ஆங்கில ஸ்போர்ட்ஸ் வலைதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
“தேர்வுக்குழுவினரும் நிர்வாகமும் குறிப்பிட்ட நபர்களைத் தாண்டிப் பார்க்கும்போது, நாம் மிகவும் வருத்தப்பட்டு விமர்சிக்கிறோம். இறுதியில், இது தனிநபர்களைப் பற்றியது அல்ல, ஆனால் அடுத்த உலகக் கோப்பைக்கான (2024 இல்) உங்கள் திட்டங்களைப் பற்றி நீங்கள் எவ்வாறு செல்ல விரும்புகிறீர்கள் என்பது பாடியது." என கம்பீர் ஒரு பெட்டியில் தெரிவித்திருந்தார்
கம்பீர் பிசிசிஐயையும் விமர்சிக்கும் வகையில். ரிஷப் பன்ட் நீக்கப்பட்டாலோ அல்லது ஓய்வெடுத்தாலோ ஏன் அனுமதிக்கப்படவில்லை என்று கேட்டு வாரியத்தையும் தேர்வாளர்களையும் கடுமையாக சாடினார்.
ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான ஒயிட்-பால் தொடரில் கோஹ்லி, ராகுல், ரோஹித் ஆகிய மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா அல்லது நீக்கப்பட்டதா என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தாத நிலையில் தான், இது குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் கம்பீர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
எனினும் கம்பீரின் கருத்து இதர கிரிக்கெட் வீரர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், "அணிக்கு எதிராக கம்பீர் பேசியது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்ததற்காக நாங்கள் அவரை மதிக்கிறோம், அதே நேரத்தில் நாங்கள் செய்ததை அவர் மதிக்க வேண்டும்." என்று கூறியதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் கம்பீரின் கருத்தால் எரிச்சலடைந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், கம்பீர் ஒரு லவுட்மவுத் என்றும், அவர் தற்போது பிசிசிஐயுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்பதால், அவருக்கு அணியின் அமைப்பில் என்ன நடக்கிறது என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ராகுல் டிராவிட் மீதும் கம்பீர் கண்டனம் தெரிவித்தார். இந்திய அணி பொதுவாக சிறப்பாக செயல்படுவது போல் தோன்றினாலும், ஐசிசி டி20 உலகக்கோப்பை அரையிறுதி போன்ற முக்கிய கட்டங்களில் படுதோல்வியடைந்து வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது என்றும் கூறினார்.
புது தலைமுறை கிரிக்கெட் வீரர்களால் இதை மாற்ற முடியும் என்று தான் நம்புவதாகவும், தற்போது புதிதாக வாய்ப்பை பெறும் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும்பட்சத்தில், மூத்த வீரர்கள் கழற்றிவிடப்படுவார்கள் அல்லது ஓய்வு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் நம்புவதாக கூறியுள்ளார்.