ஐ.பி.எல் 2023: நிக்கோலஸ் பூரான் 16-கோடிக்கு தகுதியானவர் தான்..! கௌதம் கம்பீர் அளித்த விளக்கம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 29, 2022 & 10:25 [IST]

Share

லக்னோ அணி கடந்த  ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாகக் களமிறங்கி பிளேஆப் சுற்று வரை சென்று அசத்தியது, இந்த ஆண்டு ஏலத்தில் முழுவீச்சில் செயல்பட்டு 16-கோடிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட்கீப்பர்  பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரானை வாங்கியது.

இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் நிக்கோலஸ் பூரான் பெரியளவில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லைமொத்தமாக 47-போட்டிகளில் விளையாடி உள்ள பூரான் 4-அரை சதங்களுடன்  912 ரன்களை அடித்துள்ளார்.

மேலும் நடந்து முடிந்த ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களில் அதிக விலைக்குப் போனவர் பூரான் தான்,அவருக்கு இது பொருத்தமான விலை தான என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதற்கு லக்னோ அணியின் ஆலோசகரான முன்னால் கிரிக்கெட் வீரர்  கௌதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்,லக்னோ அணிக்காக ஏலத்தில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனை வாங்க முடிவு செய்தோம். அந்த இடத்திற்குக் கண்டிப்பாக நிக்கோலஸ்  பூரான் சரியாக இருப்பார்,அவரின் கடந்த ஆண்டு பங்களிப்பை நாங்கள் பார்க்கவில்லை.

இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்களை அடித்துச் சிறப்பாக விளையாடுவதால் மட்டும் அணிக்குப் பலனில்லை,முக்கியமான போட்டிகளில் சரியான தருணத்தில் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவுவது தான் முக்கியம் அப்படிப் பார்த்தால் நிக்கோலஸ் பூரானுக்கு அந்த தகுதி முழுமையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்த ஆண்டு தொடரை மட்டும் மனதில் வைத்து அவரை ஏலத்தில் எடுக்கவில்லை,அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே மாதிரி திறமையான ஆட்டத்தை வெளிப்படும் திறன் பெற்ற வீரர் நிக்கோலஸ் பூரான் என்பது உண்மை.இவரது வயதில் நல்ல திறனுடன் இருக்கும் வீரர்கள் குறைவு எனவே லக்னோ அணிக்காகப் பூரான் சிறப்பாகச் செயல்படுவார்.

மேலும் என்னைப் பொறுத்த வரை ரெக்கார்ட்கள் படைப்பதில் பெருமையில்லை ,பங்கேற்கும் ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட்டு  அதனை வெல்வது தான் முக்கியம் என்று கம்பீர் கூறினார்.

லக்னோ அணி வரும் ஐ.பி.எல் தொடரில்  சிறப்பாகச் செயல்பட்டு தனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.